இந்தப்
பாடம் என்ன சொல்கிறது?
|
 |
|
|
தத்துவ நெறிகளை, இறையன்பு அவர்கள் எழுதிய
சிறுகதைகளின் மூலம் இப்பாடம் விளக்குகிறது. அக்கதைகள்
பறவை, விலங்கு, தாவரம் ஆகிய அஃறிணைப்
பொருள்களின் வழியும், துறவியர் போன்ற உயர்திணையினரின்
வழியும் தத்துவங்களைப் புலப்படுத்துவதை எடுத்துக்காட்டுகிறது.
செய்யும் தொழிலில் சிறப்பும் நேர்த்தியும் தத்துவ விளக்கத்தின்
பயனே எனச் சிறுகதைகள் உணர்த்துவதை எடுத்துரைக்கிறது.
முழுமையான அறிவைப் பெறுவதற்குத் தத்துவநெறி
தேவைப்படுகிறது என்பதைச் சொல்கிறது.
|
|
|