| 3.6 தொகுப்புரை |
| தொன்மை நாடகப்
போக்குகளிலிருந்து விடுபட்டதாகத்
தற்கால நாடகப் போக்குகள் உள்ளன. |
| புராண, இதிகாச
நாடகங்கள், நாடகம் முழுவதும் பாடல்கள்
என்ற தொன்மைப் போக்கின் பிடியிலிருந்து தற்கால
நாடகங்கள் விலகின. |
| சங்கரதாஸ் சுவாமிகள்
தொடங்கி அ.மங்கை வரை புதிய
நாடகப் போக்குகள் பல திசைகளிலும் பயணம் செய்யக்
காண்கிறோம். |
| ஒளி, ஒலி, ஒப்பனை,
விளம்பரம், கதையமைப்பு,
காட்சியமைப்பு, மேனாட்டுத் தாக்கம் எனப் பல நிலைகளிலும்
தற்கால நாடகங்கள் குறிப்பிடத்தக்க வளர்ச்சி பெற்றுள்ளன. |
| நவீன நாடகங்கள்
அரங்குகளை விட்டு மக்களைத் தேடிச்
செல்கிறது. பெண்கள் நாடக ஈடுபாடு கொண்டு நாடகத்தில்
நடிக்கின்றனர். |
| சபா நாடகங்கள்
பெருகி வருகின்றன. அயலகத் தமிழர்கள்
உலகெங்கும் நாடகங்களை நடத்தி வருகின்றனர்.
பல்கலைக்கழகங்களும் நாடகத் துறைகளை ஏற்படுத்தியுள்ளன. |
| 1. |
‘நாற்காலிக்காரர்’ என்ற நாடகத்தை எழுதியவர் யார்? |
விடை |
| 2. |
மு.இராமசாமியின் எந்த நாடகம் தேசிய விழாவிற்குத் தேர்வு பெற்றது? |
விடை |
| 3. |
சிறுவர்களுக்காக நாடகம் இயக்குபவர் யார்? அவருடைய குழுவின் பெயர் என்ன? |
விடை |
| 4. |
தலித் நாடக அரங்கில் குறிப்பிடத்தக்கவர் யார்? |
விடை |
| 5. |
அயலக நாடகவியலாளர் இருவர் பெயரைச் சுட்டுக. |
விடை |