4.0
பாட முன்னுரை
இன்றைய உலகின் இன்றியமையாத
துறைகளுள் இதழியலும்
ஒன்றாகும். அந்த இதழியலின் சிறப்புகள், நோக்கங்கள் முதலியவற்றை
அறிவது தேவையானதாகும். இதழ்கள் மக்களாட்சியில்
காவல்
தேவதையாக உள்ளமையையும் அரசியலமைப்பில் இன்றியமையா இடம் பெற்றுச் சிறப்புறுவதையும்
இப்பாடம் விளக்குகிறது.
இதழ்களின் பொதுவான
நோக்கங்களான தெரிவித்தல்,
நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம்,
சேவை
முதலியவற்றையும், தனிப்பட்ட இதழ்களின் கொள்கைகள்,
பொருளடக்கம் சார்ந்த சிறப்பு நோக்கங்களையும்
பாடத்தின்
இரண்டாம் பகுதி விளக்குகின்றது.
|