4.4 தொகுப்புரை

நண்பர்களே! இதுவரை இதழியலின் சிறப்பையும் நோக்கத்தையும் கண்டோம். இப்பாடத்தின் மூலம் அறிந்து கொண்டவற்றை நினைவு படுத்திப் பாருங்கள்.

  • இதழ்களின் சிறப்பைத் தெரிந்து கொண்டோம்.

  • இதழ்கள் மக்களாட்சியின் காவல் தேவதையாக அமைந்து செய்திகளைப் பரப்பியும் விளக்கியும் விமரிசித்தும் கருத்தை உருவாக்குவதை உணர்ந்து கொண்டோம்.

  • அரசியலமைப்பில் இதழ்கள் சமுதாய விழிப்புணர்வை உருவாக்கியும். கல்விச் சேவை புரிந்தும், எதிர்க்கட்சியாகச் செயலாற்றியும், வளர்ச்சிப் பணிகளில் பங்கு கொண்டு சிறப்பாக இலங்குவதையும் அறிந்து கொண்டோம்.

  • தெரிவித்தல், நெறிப்படுத்தல், பொழுதுபோக்கு, வியாபாரம், சேவை முதலிய பொதுவான நோக்கங்களின் அடிப்படையில் இதழ்கள் செயற்படுகின்றன என்பதைக் கண்டோம்.

  • ஒவ்வோர் இதழும் அவற்றின் உள்ளடக்க அடிப்படையில் சிறப்பு நோக்கம் உடையவையாக உள்ளன. அவற்றுள் இன்றியமையாத இதழ்கள் சிலவற்றை அறிந்தோம்.

இதழியல் பற்றிய இப்பாடத்தின் மூலம் இதழ்களின் சிறப்பையும் நோக்கத்தையும் அறிந்து கொண்டோம்.

     தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.

இதழ்களின் பொதுவான நோக்கங்கள் யாவை?

2.

தினமணி நாளிதழின் இணைப்புகளைக் குறிப்பிடுக.

3.

தமிழ் மாகசீன் - குறிப்பு வரைக.

4.

கீழ்க்கண்ட இதழ்களின் சிறப்பு நோக்கம் யாது?

(i)

ஞானபாநு

(ii)

விமோசனம்

(iii)

கலாவல்லி