3.0 பாட முன்னுரை

செய்தி என்பது புதியதாக (new) இருக்க வேண்டும். தற்காலத்தில் நடந்ததாக இருக்க வேண்டும். வழக்கத்திற்கு மாறாக இருக்க வேண்டும். மக்களுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்க வேண்டும்.

நேற்று என்ன நடந்தது; இன்று என்ன நடக்கிறது; நாளை என்ன நடக்கப் போகிறது என்பவற்றைச் சொல்வது தான் செய்தியாகும்.

இவ்வாறு விளக்கம் பெறும் செய்தியை, செய்தி நிறுவனங்களிலிருந்தும் செய்தி மூலங்களிலிருந்தும் (sources of news) பிற வழிகள் மூலமாகவும் பத்திரிகைகள் சேகரிக்கின்றன. அவை பற்றிய செய்திகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்படுகின்றன.