1.3 தொகுப்புரை

ஒரு பத்திரிகையின் தொடர்கள் பிழைகள் இல்லாமல் தரமானதாக இருக்க வேண்டுமானால், செய்திகள் அடங்கிய பிழையுள்ள அச்சுப்படியைக் கவனமாகத் திருத்த வேண்டும். பிழைகள் அதிகமாக உள்ள பத்திரிகையை நாளடைவில் மக்கள் புறக்கணிக்க முற்படுவர். அதனால் ஒரு பத்திரிகையின் ஆசிரியர், துணை ஆசிரியர்களுக்குரிய பணிகள் எவ்வளவு முக்கியமானதோ அதுபோலவே, அச்சுப்படி திருத்துவோரின் பணியும் இன்றியமையாததாகும். படிதிருத்தும்போது மிகவும் கவனமாகச் செயல்பட வேண்டும். ஒரு பத்திரிகையின் வளர்ச்சிக்கும் விற்பனைப் பெருக்கத்திற்கும் தரமாக வெளிவருவதற்கும் அச்சுப்படி திருத்துபவரின் பணியும் மிகவும் முக்கியமானது.

தன் மதிப்பீடு : வினாக்கள் - II
1.

திருத்தக் குறியீடுகளை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?

விடை
2.

அச்சடித்திருக்கும் சொல்லையோ, எழுத்தையோ நீக்க எத்தகைய குறியீடு இட வேண்டும்?

விடை
3.

இடைவெளி விட வேண்டாம் என்பதற்கு எத்தகைய குறியீடு இட வேண்டும்?

விடை