5.0 பாட முன்னுரை

பண்டைய காலங்களில் இலக்கியங்கள் ஏடுகளில் எழுதப்பட்டன. அதை எழுதுவதற்கும் படிப்பதற்கும் அதிக முயற்சி தேவைப்பட்டது. அச்சுக்கலை கண்டுபிடிக்கப்பட்ட பின்பு அனைத்துச் செய்திகளையும் அறியும் வாய்ப்புக் கிடைத்துள்ளது. இன்றைய உலகம் செய்தித்தாள் உலகமாக மாறிவிட்டது. நூல்கள், இதழ்கள், அறிக்கைகள், விளம்பரங்கள், அழைப்பிதழ்கள், நாட்குறிப்புகள் அனைத்தும் நம் வாழ்வுடன் கலந்துவிட்டன; இவையின்றி நாம் வாழ முடியாது; இதற்கெல்லாம் காரணம் அச்சுக்கலையின் தோற்றமே.