5.5 படங்களைப் பதிப்பிக்கும் முறை
தொடக்கக் காலங்களில் மரத்திலும் கல்லிலும் செதுக்கப்பட்டுப் படங்கள் பதிப்பிக்கப்பட்டன. இப்படப் பதிவுக்கு இன்றைய நவீன காலத்தில் பல்வேறு முறைகள் கையாளப்படுகின்றன. அவை:
1) |
மரத்தைச் செதுக்கிப் பதிப்பது (Wood cutting method) |
2) |
உலோகத்தைச் செதுக்கிப் பதிப்பது (metal engraving method)
|
3) |
அரித்தல் முறை (Etching method) |
4) |
எழுத்தச்சுப் படிமை முறை (Lithography method)
|
என்பன படப்பதிவில் கையாளப்படுகிற முறைகளாகும்.
மேற்கண்ட பழைய முறைகளைத் தவிர இன்று வளர்ந்து வருகிற அறிவியல் வளர்ச்சியால் படப்பதிவிற்குப் பல்வேறு அதிநவீன முறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. அவை:
1) |
புகைப்பட எழுத்தச்சுப் படிமை முறை (Photo Lithography) |
2) |
தொய்வகப் பதிப்பு முறை (Leno cuts)
|
3) |
ஆப்செட் பதிவு முறை (Offset process) |
4) |
புகைப்படப் பதிவு முறை (Photograving)
|
போன்ற பல்வேறு முறைகளும் படப்பதிவு முறையில் கையாளப்படுகின்றன. படப்பதிப்புகள் இவ்வாறு பல்வேறு முறைகளில் அமைக்கப்பட்டாலும் இப்பதிப்புகள் கோக்கப்பட்ட செய்திகளின் அகல, உயரத்திற்கேற்பப் பக்க அமைப்பிற்குப் பொருத்தமாக அமைக்கப்படும். தேவையான அடிக்குறிப்பு விளக்கத்துடன் படங்கள் பதிப்பிக்கப்படுகின்றன.
தன் மதிப்பீடு : வினாக்கள் - I |
1. |
அச்சிட வேண்டிய எழுத்துக்களை முற்காலத்தில் எவற்றில் செதுக்கினர்?
|
விடை |
2. |
‘நாரா’ என்றால் என்ன?
|
விடை |
3. |
தொடக்கக் காலங்களில் எந்த நாட்டில் காகித நாணயம் அச்சடிக்கப்பட்டது?
|
விடை |
4. |
அச்சுக்கலையின் தந்தை யார்?
|
விடை |
5. |
எந்த ஆண்டு தரங்கம்பாடிக்கு அச்சுப்பொறி கொண்டு வரப்பட்டது?
|
விடை |
6. |
அச்செழுத்துக்களை அடுக்கப் பயன்படும் முறைகள் யாவை?
|
விடை |
7. |
அச்சு வார்க்கும் பொறிகளின் வகைகள் யாவை?
|
விடை |
|
|