2.4 உவமைத் தொகை


    உவமைத் தொகை என்பது, போல முதலிய உவமைஉருபு
மறைந்து நிற்க, உவமானச் சொல்லோடு உவமேயச் சொல்
தொடர்வதாகும்.

     போல என்பதோடு புரைய, ஒப்ப, உறழ, அன்ன, இன்ன
முதலியனவும் உவம உருபுகளாகும்.

     இவ்வுவமை வினை, பயன், மெய், உரு என்பன பற்றி
வரும்.

எ-டு :
புலி மனிதன் - வினையுவமைத் தொகை
மழைக்கை - பயனுவமைத் தொகை
துடியிடை - மெய்யுவமைத் தொகை
பவளவாய் - உருவுவமைத் தொகை


     இவை விரியும் பொழுது, புலி போலும் மனிதன், மழை
போலும் கை, துடி போலும் இடை, பவளம் போலும் வாய் என விரியும்.

     உவம உருபிலது உவமத் தொகையே
         (நன்னூல் - 366)