3.1 வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்

     உருபுகள் பெற்றுவரும் வேற்றுமைகள் இரண்டு முதல் ஏழு
வரை மொத்தம் ஆறு என முன்னர்க் கூறப்பட்டது. இந்த
ஆறு     வேற்றுமைகளின் உருபுகள் வெளிப்பட நின்று
தொடரும் தொடர் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
எனப்படும்.

(எ.டு.)

பாடத்தைப் படித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
கத்தியால் குத்தினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
மகளுக்குக் கொடுத்தான் - நான்காம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
ஏணியில் இறங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
நண்பனது வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்
வான்கண் நிலா     - ஏழாம் வேற்றுமைத் தொகாநிலைத் தொடர்