| 6.1 திணை | |
|
|
திணை உயர்திணை, அஃறிணை என இருவகைப்படும். |
| 6.1.1 திணை வழுநிலை | |
| சொற்றொடர்களில் ஒரு திணைக்கு
உரிய பெயரைப் பயன்படுத்துகிற போது அத்திணைக்கு உரிய வினையைக் கொண்டுதான் முடிக்க வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால் அது திணை வழுவாகும். எ.டு. அப்பா வந்தது. இச்சொற்றொடரில் ‘அப்பா' என்னும் பெயர் உயர்திணைக்கு உரியது. இச்சொல் எழுவாயாக வந்துள்ளது. ‘வந்தது' என்பது வினைப் பயனிலை. இஃது அஃறிணைச் சொல், அப்பா என்னும் உயர்திணை எழுவாய்க்கு, முடிக்கும் சொல்லாக ‘வந்தது' இடம்பெற்றுள்ளது. இவ்வாறு உயர்திணை எழுவாய்க்கு அஃறிணையும், அஃறிணை எழுவாய்க்கு உயர்திணையும் பயனிலையாக வருவது வழுவாகும். |
|
| 6.1.2 திணை வழாநிலை | |
| ஒரு திணைக்கு உரியதாக வரும் பெயருக்கு ஏற்றார்
போல அதன் முடிக்கும் சொல்லாக வரும் வினையும் அத்திணைக்கு உரியதாக அமைவது திணை வழாநிலையாகும். எ.டு. கண்ணகி பாடினாள் மாடு ஓடியது முதல் தொடரில் ‘கண்ணகி' என்னும் உயர்திணைப்பெயர், ‘பாடினாள்' என்னும் உயர்திணைக்குரிய வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இரண்டாவது தொடரில் ‘மாடு' என்னும் அஃறிணைப் பெயர் ‘ஓடியது' என்னும் அஃறிணை வினைமுற்றைக் கொண்டு முடிந்தது. இவ்விருதொடர்களும் இலக்கண முறைக்கு ஏற்றதாக உள்ளமையால் வழாநிலைத் தொடர்களாகும். |
|
| 6.1.3 திணை வழுவமைதி | |
| உயர்திணைப் பெயரை அஃறிணைப்
பெயர் சார்ந்து வரும் |
|