|
ஒருவன் வினவிய பொருள் தன்னிடம்
இருந்தால் உண்டு
என்று கூறுதல் விடை வழாநிலை. அப்பொருள்
இல்லை என்றால் அதனை இல்லை எனக் கூறுவதற்கு மாறாக அதனை நேரடியாகச் சொல்லாமல்
அவன் வினவியதற்கு இனமாகத் தன்னிடம்
உள்ள ஒன்றையோ பலவற்றையோ
கூறுவதால், அவன் கேட்ட பொருள் தன்னிடம் இல்லை என உணர்த்துவதும் விடை வழாநிலை
யாகும்.
தம்பால் இல்லது இல்லெனின் இனனாய்
உள்ளது கூறி மாற்றியும் உள்ளது
சுட்டியும் உரைப்பர் சொற்சுருங் குதற்கே
(நன்னூல் : 406) |