| |
இந்தப் பாடம் சொற்றொடர்களில் திணை, பால், இடம், காலம், வினா,
விடை, மரபு ஆகியவற்றில் ஏற்படும் வழுக்களைத் தெரிவிக்கிறது;
அவ்வழுக்களை நீக்கி மொழியைப் பிழையறப் பயன்படுத்தும் வழா நிலைகளைப்
பற்றி அறிவிக்கிறது. இலக்கண மரபிற்கு மாறுபட்டதாயினும் வழுவமைதியாகக்
கொள்ளவேண்டியவை யாவை, அவற்றிற்கான மொழிச்சூழல்கள் யாவை என்பது
பற்றி விளக்குகிறது.
|
|