தமிழ் இலக்கணம், தமிழ் இலக்கியங்களை செழுமைப்படுத்த
உதவுகிறது. குறிப்பாக அணி இலக்கணம் தமிழ்ச் செய்யுள்
வகைகளுக்கு சிறந்த
அணிகலமாகத் திகழ்கிறது.
இவ்விலக்கணங்களைக் கற்பதன் மூலம் தமிழ் இலக்கியங்களைப்
படித்து உணர முடியும். புதிய இலக்கியங்களைப்
படைத்து
மகிழவும் முடியும்.
இப்பாடம் சொல் அணி குறித்து உங்களுக்கு
அறிமுகம்
செய்கின்றது. அதன் வகைகள் குறித்தும், அது தரும் அழகு
குறித்தும் விவரிக்கின்றது. |