தமிழ்மொழி இலக்கண வளமை உடையது. அதற்கு ஐவகை
இலக்கணங்கள் உண்டு.
எழுத்து, சொல், பொருள், யாப்பு,
அணி என்னும் இவ்வைந்தும் தமிழ்மொழி இலக்கியத்திற்குத்
தகுந்த கட்டமைப்பைத் தருவன. தனி எழுத்துக்கள் ஒன்றுகூடி
சொற்கள் உருவாகின்றன. இந்தச்
சொற்கள் பொருள் பெறுவதற்கு
இடமாகின்றன. சொல்லும் பொருளும் இணைந்து யாப்பாகி
புலவன் சொல்ல வரும் கருத்தை வெளிப்படுத்த உதவுகின்றன.
படிப்பவர்க்குச் சொல் இன்பமும், பொருள் இன்பமும் தர
அணிகள் உதவுகின்றன. இவ்வாறு தமிழ் இலக்கணத்தின்
ஐவகைகளும் தமிழ்
இலக்கியச் சிறப்பிற்குக் காரணமாகின்றன.
 |
அணிகள் குறித்த இலக்கணங்கள் தண்டி
என்பவரால்
இயற்றப்பட்ட தண்டியலங்காரம்
என்ற நூலில்
தொகுத்துரைக்கப்பட்டுள்ளன.
தண்டி என்பது இயற்றிய ஆசிரியர்
பெயர்
குறித்து அமைந்தது.
அலங்காரம் என்பது
வடமொழி
மரபை
ஒட்டித் தமிழ்
அணிகளுக்காகத் தரப் பெற்ற பெயராகும். |
இந்நூல் பொது அணி இயல், பொருள் அணி இயல்,
சொல்லணி இயல் என்ற மூன்று பகுதிளை உடையதாகும்.
பொதுவணி இயல் செய்யுள் வகைகளையும் செய்யுள்
நெறிகளையும் எடுத்துரைக்கின்றது. பொருளணியியலில் தன்மை
அணி முதலாக பாவிக அணி வரையிலான 35 அணிகளுக்கான
இலக்கணங்களும்,
அவற்றின் வகைகளும் உரைக்கப் பெறுகின்றன.
இவை செய்யுள் தரும் பொருளைச் சிறப்புப்படுத்தும்
வகையில்
அமைந்தவை.
அடுத்ததாக இடம்பெறும் சொல்லணியியலில் சொல்
அலங்காரமாக நிற்கும்
முறை உணர்த்தப் பெறுகின்றது.
செய்யுளில் இடம் பெறும் சொற்கள் தம் அமைப்பு முறையால்
அலங்காரமாகத் திகழ்வதை எடுத்துரைப்பதாக இப்பகுதி
அமைகின்றது. இப்பிரிவில்,
(1) |
மடக்கு |
(2) |
சித்திரக்கவிகள் |
(3) |
வழுக்கள் |
(4) |
மலைவு |
ஆகியன குறித்த இலக்கணங்கள் இடம் பெறுகின்றன.
இவற்றுள் மடக்கு, சித்திரக்கவிகள் என்ற இரண்டு மட்டுமே
சொல்லணியின் நேரடி வகைப்பட்டனவாகும். அவை குறித்த
அறிமுகத்தை இப்பாடமும், இதற்கு அடுத்த பாடமும்
உங்களுக்குத் தருகின்றன. |