மாணவர்களே ! சொல்லின்பத்தைத் தாங்கள் இப்போது
உணர்ந்திருப்பீர்கள்
என எண்ணுகிறேன்.
மற்றொரு திரைப்படப் பாடலை, உங்களுக்கு நினைவு படுத்தி
இப்பகுதியை
நிறைவு செய்கிறேன்.
வசந்த காலங்கள் எனத் தொடங்கும் திரைப்படப் பாடலில்,
இதழ்கள் ஊறுமடி (இரு இதழ்களும் ஊறுமடி)
இதழ் - கள் - ஊறுமடி [இதழில் கள் (அமுதம், மது)
ஊறுமடி]
எனப் பிரித்தும், பிரிக்காமலும் பொருள் வேறுபாடு காட்டப்
பெற்றிருக்கும். சொல்லணி படித்த நீங்கள் இதுபோல பல
பாடல்களை அறிந்து மகிழலாம்.
|