பாடம் - 5

A02145 சொல்லணி அறிமுகம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

இந்தப் பாடம் அணியிலக்கணத்தின் ஒரு பகுதியான
சொல்லணி குறித்து விளக்குகின்றது. மடக்கு என்ற
சொல்லணியை    அறிமுகம்     செய்கிறது. அதன்
இலக்கணத்தை அறிவிக்கிறது. அதன் வகைகளை
வகைப்படுத்துகிறது. அது செய்யுளில் அமைந்துவரும்
அழகை எடுத்துக் காட்டுகின்றது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சொல்லணி செய்யுள்களுக்குத் தரும் அழகை
    உணரலாம்.
  • மடக்கு அணி, செய்யுளில் இடம்பெறும் சொற்கள்
    வழியாகக் கற்போருக்கு இன்பம் தரும் முறையை
    அறியலாம்.
  • மடக்கு அணி பயின்று வரும் தற்காலப் பாடல்களை
    இனம் காண இயலும்.
  • மடக்கு அணியின் இலக்கணத்தை அறியலாம்.
  • மடக்கு அணியின் வகைகளை அறியலாம்.

பாட அமைப்பு