தன் மதிப்பீடு : விடைகள் - I

1. சிற்றிலக்கியம் என்பது யாது?

அறம் பொருள் இன்பம் என்ற குறிக்கோள்களைப் பற்றியனவாக
இல்லாமல், மன்னர்கள், தெய்வங்கள், வள்ளல்கள் மீது
புகழ்ச்சியாகப் பாடப்பெற்றது சிற்றிலக்கியம். கோவை, உலா,
அந்தாதி, கலம்பகம், பிள்ளைத் தமிழ், தூது, பரணி, பள்ளு,
மாலை என்பன அதன் வகைகள்.