|
நல்ல குடியில் பிறந்தாரிடம் பிறரோடு
இனிமையாகப் பழகும்
எளிமை உண்டு; மானத்தைக் காப்பாற்றத் தம் உயிரையும்
விடும் தன்மை உள்ளது; தன்குடியை ஆளுமை செய்யும்
ஆற்றலும் இருக்கின்றது; இவை போன்ற நற்குடிமாந்தரின்
இயல்புகளைப் பற்றிய வள்ளுவரின் வாழ்வியல் தத்துவங்கள்
இப்பாடத்தில் இடம் பெறுகின்றன.
நல்ல
குடியில் பிறந்தவன், குற்றம் இல்லாதவனாக இருந்து,
தன் உழைப்பினால் கிடைப்பவற்றை இனிதே சேர்த்து,
தேவைக்கு ஏற்ப உதவி செய்வான் என்பதையும் கூறுகிறது.
நல்ல
குடியிலுள்ளோர், ஆடவரானாலும் கற்போடு ஒழுக
வேண்டும், பணிவுடன் இருக்க வேண்டும் என்பதையும்
குறிப்பிடுகிறது.
நல்ல
குடியில் பிறந்தவர், இழுக்கு அளிப்பனவற்றையும்,
பண்பில்லாதனவற்றையும் செய்யமாட்டார்கள் என்பதையும்
கூறுகிறது.
நல்ல
குடியில் பிறந்தோர் சிறுகுற்றம் செய்தாலும் அது
நிலவின் கறைபோல் எல்லோர் கண்ணிலும் புலப்படும் என்று
வள்ளுவர் படம் பிடித்தும் காட்டும் தத்துவத்தின் விளக்கம்
இடம் பெறுகிறது.
|