3. தமக்குப் பாதுகாப்பாக இருக்கும் எலும்பையே பிறருக்குக்
கொடுப்பவர்கள் யார்?

பொதுநலம் கருதுகின்ற சான்றோர்கள், தமக்குப் பாதுகாப்பாக
அமையும் எலும்பையே பிறருக்குக் கொடுப்பார்கள். பிறர் மீதுள்ள
அன்பின் மிகுதியால் இவ்வாறு செய்வார்கள்.