5. சான்றோரையும் மழையையும் ஒப்பிட்டுக் கூறக் காரணம்
என்ன?

மழை எந்த ஒரு மறு உதவியையும் எதிர்பார்க்காமல் உலகிலுள்ள
மக்கள் அனைவருக்கும் பயன்படும்படி பெய்கிறது. சான்றோர்களும்
பிறரிடமிருந்து மறு உதவிகளை எதிர்பார்க்காமல் உதவி
செய்கின்றனர். இவ்வாறு சான்றோர்களின் இயல்பு மழையோடு
ஒத்திருப்பதால், சான்றோரையும் மழையையும் ஒப்பிட்டுச் சொல்கிறார்
வள்ளுவர்.