|
இறைவனைப் பற்றியும், உயிரைப்பற்றியும்
உலகத்தைப்
பற்றியும் கூறப்படும் தத்துவக் கருத்துகள் காலம் கடந்து
வாழ்பவை. இவை பற்றிய வள்ளுவரின் கருத்துகள் இந்தப்
பாடத்தில் இடம் பெற்றுள்ளன.
பொதுமைக்
கூறுகளாகிய, வாய்மை, ஒழுக்கம், அன்பு
ஆகியவை பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள் இங்கே
கூறப்பட்டுள்ளன.
எல்லோருக்கும்,
எல்லாக் காலத்திலும் பொருந்துகின்ற, அறிவு,
தகுதி, முயற்சி ஆகியவை பற்றி வள்ளுவரின் கருத்துகள்
எடுத்துரைக்கப்பட்டுள்ளன. இயற்கையாக அமைந்திருக்கும்,
மழை, காலம் என்பவை எத்தகைய நன்மைகளையும்
தீமைகளையும் விளைவிக்கின்றன என்பவையும்
சொல்லப்பட்டுள்ளன.
|