|
ஒரு சமுதாயத்தின் நாகரிக வளர்ச்சிக்குக் கலையும்,
இலக்கியமும் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். கலையைக்
கவின்கலை, பயன்கலை என்று இரண்டு பிரிவாகக் கூறுவர். இசை
போன்றவற்றைக் கவின்கலை அல்லது அழகுக்கலை என்றும்,
கட்டடக்கலை போன்றவைகளைப் பயன்கலை என்றும் கூறுவர்.
கலை மனத்திற்கு இன்பம் தரவல்லது; மகிழ்ச்சியூட்டக்கூடியது.
கலை வெறும் பொழுதுபோக்குக்கு மட்டும் உரியது அல்ல;
தமிழ்நாட்டில் கலை சமயத்தோடு தொடர்புடைய தெய்வீகக்
கலையாக விளங்குகிறது.
சமுதாய நிகழ்ச்சிகளின்
பதிவாகப் பண்பாட்டை
எடுத்துக்காட்டுவது இலக்கியம். இலக்கியம் கடந்த காலத்தைக்
காட்டும் கண்ணாடியாகவும் பயன்படுகிறது. கலை பற்றியும்
இலக்கியம் பற்றியும் இப்பாடத்தில் பார்க்கலாம்.
|