|
பழங்கால மக்களிடம் சமய நம்பிக்கையும்,
கடவுள் வழிபாடும்
எவ்வாறு இருந்தது என்பதைக் கூறுகிறது. சமய நிறுவனங்களாக
விளங்கியவை கோயில்கள் என்பதைச் சொல்லி, கோயில்களின்
வளர்ச்சியையும் குறிப்பிடுகிறது. பல்லவ, பாண்டிய, சோழ மரபைச்
சார்ந்த மன்னர்கள் கோயில் பணிசெய்ததையும்
சமய
வளர்ச்சிக்காக மடங்கள் நிறுவியதையும் சுட்டிக்
காட்டுகிறது.
சமண, பௌத்த, சைவ மடங்கள் இருந்ததைக் கூறுகிறது. கோயில்
வழியாகச் சமயப் பணியும், சமுதாயப் பணியும் நடைபெற்றதை
உணர்த்துகிறது. கோயிலை இறைவனாகக் கருதி
வழிபட்ட
வழக்கத்தை குறிப்பிடுகிறது. கோயிலுக்கு விளக்கேற்ற கொடை
அளிக்கப்பட்ட செய்தியும் இடம்பெறுகிறது.
|