|
அரசுக்கோ நாட்டுச்சபைகட்கோ கொடுக்க வேண்டிய
வரிகளைக் குறைக்குமாறு சிலர்
வேண்டுகோள்
விடுத்துள்ளமையைக் கல்வெட்டுகளில் காணுகின்றோம். “மச்சுனன்
அழகப் பெருமாள் சொன்னமையில்”, “பெருந்தரம் வீரசோழ
மூவேந்தவளோன் சொல்லி நினைப்புமிட்டமையில் இறை
இழிச்சினோம்’ என்று கூறி, வரியைப் பாதியாகவோ மூன்றில்
ஒருபங்கோ குறைத்துள்ளனர். (இழிச்சுதல் - குறைத்தல்).
'காடெழு கரம்பு நீரேறாப்பாழ்' போன்ற
தரிசு நிலத்தைப்
பயிர் செய்தவர்கட்கும், புதிதாகக்
குடியேற்றப்பட்ட
வளோளர்கட்கும், கைக்கோளர் முதலிய தொழில்புரியும்
மக்களுக்கும் மூன்று நான்கு ஆண்டுகளுக்கு வரி இல்லையென்றும்,
அடுத்துவரும் ஆண்டுகட்கு மூன்றில் ஒன்றும், பின்னர் வரும்
ஆண்டுகட்குப் பாதியும் வரி வாங்கப்பட்டது
என்பதையும்
கல்வெட்டு மூலமாக அறிகிறோம். தவறாக வரிவாங்கிய இடங்களில்
வரி திருப்பிக் கொடுக்கப்பட்ட
விபரமும் கல்வெட்டால்
அறிகிறோம்.
|