|
ஆறு, அணை, குளம், ஏரி, ஏந்தல், வாய்க்கால், கிணறு ஆகிய
நீர் நிலைகளைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. நீர்த்
தேக்கங்களிலிருந்து குமிழி, தூம்பு, மடை, மதகு, கண், வாய்,
துளை ஆகியவற்றின் வழியாக நீர் பாய்ந்து நிலத்தை அடைகிறது.
வாய் என்பது மதகு. நீரைக் கொண்டு செல்லுவது 'கால்'
எனப்படும். வாயிலிருந்து செல்லும் கால் 'வாய்க்கால்' ஆயிற்று.
|
மழைநீராலும், ஆற்றுநீராலும், ஊற்று நீராலும் வளோண்மை
நடைபெறும். 'பாயும் நீர் பாயவும், வாரும்நீர் வாரவும், இறைக்கும்
நீர் இறைக்கவும் படுவது' என்ற கல்வெட்டுத் தொடரால் பாய்தல்,
வாருதல், இறைத்தல் மூலம் நீர் நிலத்தில் சேர்வது தெளிவாகிறது.
குற்றேத்தம், நெட்டேத்தம் என இரு முறைகளைக் கல்வெட்டுக்
கூறுகிறது. அவை நீர் இறைத்துப் பாய்வதும், தானே பாய்வதும்
ஆகும்.
|