A03141 - சங்க காலமும் பிற்காலமும் ஓர் அறிமுகம்
இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

    இந்தப் பாடம் சங்க காலத் தமிழகம் பற்றிய
செய்திகளைக் கூறுகிறது. சங்ககால மக்கள் தாம் வாழ்ந்த
நிலத்தை எவ்வாறு பாகுபாடு செய்திருந்தனர் என்பதையும்
குறிப்பிடுகிறது.    சங்ககாலத்     தமிழகத்தை ஆண்ட
மன்னர்களைப் பற்றியும் கூறுகின்றது. அக்கால ஆட்சி முறை
எவ்வாறு இருந்தது என்பதையும் சுட்டுகிறது. சங்க காலச்
சமுதாயத்தில், கல்விக்குக் கொடுத்த சிறப்பு, கைத்தொழில்,
வணிகம் போன்றவற்றின் சிறப்பு, நாகரிகம், பண்பாடு
ஆகியவைபற்றியும் கூறுகிறது. சங்க காலத்திற்குப் பின் வந்த
காலத்தில் தமிழகத்தை ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றிக்
குறிப்பிடுகிறது. மேற்குறிப்பிட்ட காலகட்டத்தில் தோன்றிய
இலக்கியங்களைப் பற்றியும் எடுத்துரைக்கிறது.
இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்
பெறலாம்?
சங்க காலத் தமிழகத்தைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்
சங்க காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களைப் பற்றித்
தெரிந்து கொள்வீர்கள்.
ஆட்சிமுறை எவ்வாறு அமைந்திருந்தது என்பதையும்
புரிந்து கொள்வீர்கள்.
கல்விக்கும் கைத்தொழிலுக்கும் வணிகத்திற்கும் கொடுத்த
சிறப்பை அறிந்து கொள்வீர்கள்.
சங்க கால மக்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும்
தெரிந்து கொள்வீர்கள்.
சங்க காலத்தை அடுத்த காலப்பகுதியில் ஆட்சி
செய்த மன்னர்களைப் பற்றி அறிந்து கொள்வீர்கள்.
சங்க காலத்திலும், பிற்காலத்திலும் தோன்றிய
இலக்கியங்களைப் பற்றியும் தெரிந்து கொள்வீர்கள்.