| |
இச்சோழர் வரலாற்றுப்பாடத்தில் சோழர் மரபு பற்றிய
செய்திகள், பிற்காலச் சோழர் ஆட்சி செய்த காலம், இரு
கிளையினர்ஆட்சி, காலவரிசைப்படி சோழ அரசர்கள், அவர்கள்
நிகழ்த்திய சாதனைகள் ஆகியவை விவரிக்கப்பெற்றுள்ளன.
சோழர் ஆட்சி முறை எவ்வாறு திகழ்ந்தது, சோழ
மண்டலம், புறமண்டலங்கள் பற்றிய செய்திகள், நாட்டுப்பிரிவுகள்,
அரச உரிமை, பட்டப்பெயர்கள், சமய நிலை, சோழர் இலச்சினை,
அமைச்சர் குழு, உயர்நிலை அலுவலர்கள், கிராம ஆட்சி
முறை, நீதிமன்றங்கள், ஆவணக்களரி , அரசிறையும் பிற
வரிகளும், நிலஅளவு, நீர்ப்பாசன முறை, கல்விச்சாலைகள்,
மருத்துவமனைகள், திருக்கோயில்கள், காசுகள், உருவச்
சிலைகள், இலக்கிய வளர்ச்சி ஆகியவை பற்றியும் இப்பாடத்தில்
கூறப்பெற்றுள்ளன.
|