4. பாண்டியப் பேரரசு விரிவடையக் காரணமாகத் திகழ்ந்த
இரண்டு பாண்டிய அரசர்கள் யாவர்? அவர்களுடைய
மெய்க்கீர்த்தி (கல்வெட்டுப் பாடலின் தொடக்க வரி)
எவ்வாறு தொடங்குகின்றது?
பாண்டியப் பேரரசு விரிவடையக் காரணமாகத் திகழ்ந்தவர்கள்
மாறவர்மன் முதலாம் சுந்தரபாண்டியன் மற்றும் சடையவர்மன்
முதலாம் சுந்தரபாண்டியன் எனும் இருவர் ஆவர்.
இவர்களுடைய மெய்க்கீர்த்திகள் முறையே ‘பூமருவிய
திருமடந்தை’, “பூமலர் வளர் திகழ்” எனத் தொடங்குகின்றன.
முன்