| கலைச்சொல் விளக்கம் | 
| A06133 : கருநாடக இசை | ||
| 3.1.1 | ஆதார ஒலி | காண்க. பாடம் 1.4.2 | 
| சுருதி | ஆதார ஒலி, சுருதி என்றும் சொல்லப்படும். | |
| 3.1.2 | சுரம்(ஏழிசை) | ஒலியின் ஏழு நிலைகள் ஏழிசை எனப்படும் | 
| 3.1.3 | ஆரோகணம் | ஆரோசை, வடமொழியில் ‘ஆரோகணம்’ எனப்படும் | 
| அவரோகணம் | அமரோசை, வடமொழியில் ‘அவரோகணம்’ எனப்படும் | |
| இராகம் | இனிமையான ஒலித் தொகுப்பு | |
| சம்பூர்ண இராகம் | ஏழு சுரங்களைக் கொண்ட இராகம் சம்பூர்ண இராகம் எனப்படும் | |
| சாடவ இராகம் | ஆறு சுரங்களைக் கொண்ட இராகம் | |
| ஒளடவ இராகம் | ஐந்து சுரங்களைக் கொண்ட இராகம் | |
| 3.2 | ஜனக இராகம் | ஏழு சுரங்களும் இருக்கும் இராகம் ஜனக இராகம். இதற்கு தாய் இராகம், கர்த்தா இராகம், மேள இராகம், மேளகர்த்தா இராகம், சம்பூர்ண இராகம் என்ற பெயர்களும் உண்டு. | 
| ஜன்ய இராகம் | ஏழு சுரங்கள் முழுமையாக இல்லாத இராகங்கள் ஜன்ய இராகம் எனப்படும். | |
| தாய் இராகம் | காண்க ஜனக இராகம் | |
| கர்த்தா இராகம் | காண்க ஜனக இராகம் | |
| மேள இராகம் | காண்க ஜனக இராகம் | |
| மேளகர்த்தா இராகம் | காண்க ஜனக இராகம் | |
| சம்பூர்ண இராகம் | காண்க ஜனக இராகம் | |
| 3.2.1 | மேளகர்த்தா இராகம் | காண்க ஜனக இராகம் | 
| சுர வகை | நுட்ப அலகு வேறுபட்டால் ( frequency) ஒரு சுர நிலை வேறுபட்டு சுர வகைகள் தோன்றும். | |
| நுட்பமான சுருதி/அலகு | ஓர்ஒலி நிலையின் அலகுக் கணக்கு (frequency) | |
| சுத்தமத்திம இராகம் | பிரதி மத்திம (ம1) சுரத்தை எடுத்துக் கொள்ளும் இராகங்கள். | |
| பிரதி மத்திமஇராகம் | பிரதி மத்திம (ம2 ) சுரத்தை எடுத்துக்கொள்ளும் இராகங்கள். | |
| சேய் இராகம் | ஜன்ய இராகத்திற்கு மற்றொரு பெயர் | |
| வர்ஜ இராகம் | ஏழு சுரங்களையும் முழுமையாக எடுக்காத இராகம். | |
| வக்ர இராகம் | சுரங்கள் ஒழுங்கு மாறி வருவது | |
| உபாங்க இராகம் | ஜனக / தாய் இராகத்தின் சுரங்களை எடுக்கும், ஜன்ய / சேய் இராகம் உபாங்க இராகம் | |
| பாவிங்க இராகம் | ஜனக / தாய் இராகத்தில் இல்லாத வேறு சுரங்களை எடுக்கும் இராகம் பாவிங்க இராகம். | |
| 3.3 | சப்த தாளங்கள் | ஏழு வகைத் தாளங்கள் | 
| லகு | தாளத்தின் ஒரு அங்கம் | |
| துருதம் | இதுவும் தாளத்தின் மற்றொரு அங்கம் | |
| அனுத்துருதம் | இதுவும் தாளத்தின் மற்றொரு அங்கம் | |
| 3.3.2 | சாபு தாளம் | தாள வகைகளில் ஒன்று | 
| 3.4 | அப்பியாசகானம் | இசை / பயிற்சிப் பாடங்கள் | 
| சபா கானம் | இசை நிகழ்ச்சிகளில் இடம்பெறும் பாடல்கள் | |
| இசை உருப்படி | இசைப்பாடல்வகைகள்(Musical Compositions) | |
| 3.4.1 | சாதாரண கீதம் | மிக எளிமையான இசைப்பாடல் வகை | 
| இலக்கண கீதம் | இராகத்தின் இலக்கணத்தைக் கூறும் இலகுவான இசைப்பாடல் வகைகள் | |
| சூளாதி | வெவ்வேறு தாளங்களில் அமைந்த இலகுவான இசைப்பாடல் வகை | |
| 3.4.2 | சுரஜதி | சுரமும் ஜதியும் கொண்ட ஒரு இசை வகை.இதில் பாடல் உண்டு. | 
| ஜதிசுரம் | சுரமும் ஜதியும் கொண்ட ஒரு இசை வகை. இதில் பாடல் இல்லை. | |
| 3.4.3 | வர்ணம் | இது பயிற்சிக்குரிய ஒரு இசை வகை. இசை நிகழ்ச்சிகளிலும் இடம்பெறும். | 
| பூர்வாங்கம் | வர்ணத்தின் முதல் பாதி | |
| உத்ராங்கம் | வர்ணத்தின் இரண்டாவது பாதி | |
| தாள வர்ணம் | வர்ணத்தின் ஒரு வகை. பயிற்சிக்கு உரியது | |
| பத வர்ணம் | வர்ணத்தின் ஒரு வகை. முழுவதும் பாடல் கொண்டது. நாட்டிய நிகழ்ச்சிகளில் இடம்பெறும் | |
| காலம் | பாட்டின் வேக அளவைக் குறிக்கும்.(Tempo) | |
| மத்திம காலம் | பாட்டின் விரைவான வேக அளவைக் குறிக்கும். (Fast Tempo) | |
| இராக மாலிகை | ஒரே பாடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்களில் பாடல் அமைந்திருக்கும். | |
| 3.4.4 | கீர்த்தனை | ஓர் இசை வகை. (Musical Compositions) | 
| சிட்டை ஸ்வரம் | கீர்த்தனை, வர்ணத்தில் பல்லவி, அனுபல்லவி என்ற அங்கங்களுக்குப் பின்வரும் சுரங்களால் மட்டும் அமையும் பகுதி. | |
| மத்திம கால சரணம் | கீர்த்தனையின் சரணப் பகுதியில் பிற்பகுதியை விரைவான வேகத்தில் (Fast Tempo) பாடுதல் | |
| சொற்கட்டுகள் | தகதிமி, தகிட போன்ற கோர்வைகள் சொற்கட்டுகள் எனப்படும் | |
| இராகமாலிகை | பார்க்க இராகமாலிகை பாடம் 3.4.3 | |
| தாள மாலிகை | ஒரு பாடல் ஒன்றுக்கும் மேற்பட்ட தாளங்களில் அமைந்திருப்பது. | |
| 3.4.5 | பதம் | இது நாட்டியத்திற்கு ஏற்ற ஓர் இசை வகை. | 
| 3.4.6 | தில்லானா | இது நாட்டியத்திற்கேற்ற ஓர் இசை வகை. | 
| 3.5.2 | திமிரி | நாதசுவர இசைக்கருவியின் ஒரு வகை | 
| பாரி | நாதசுவர இசைக்கருவியின் மற்றொரு வகை | |
| சீவாளி | நாதசுவர கருவியின் வாய் வைத்து ஊதும் பகுதி. | |
| ஒத்து | நாதசுவரம் இசைப்பதற்கு ஆதார ஒலி தரும் கருவி | |
| 3.5.3 | தாளம் | வீணை என்னும் இசைக்கருவியில் இசை பெருக்கும் ஒரு வகை இசை அமைப்பு | 
| 3.5.4 | வலந்தலை | மிருதங்க இசைக்கருவியின் வலப்பக்கம் | 
| தொப்பி | மிருதங்க இசைக்கருவியின் இடப்பக்கம் தொப்பி | |
| 3.6.2 | சமஷ்டிசரணம் | பல்லவி, அனுபல்லவி பகுதிகள் பாடப்பெறும் வேகத்தை விட அதிக வேகத்தில் (Fast Tempo) பாடப்படும் சரணப் பகுதி |