2.

தேவாரத் தொகுப்பில் ‘பண்முறை’ ‘தலமுறை’ என்பன
யாவை?


ஓர் ஆசிரியர் பல தலங்களிலும் பாடிய பதிகங்கள்
பலவற்றையும் அவற்றின் பண் வரிசையில் தொகுப்பது
பண்முறை. பாடப் பெற்ற தலப்பதிகங்களைத் தலங்கள்
அடிப்படையில் தொகுப்பது தலமுறை. தேவாரத்திருமுறைகள்
ஏழாகத் தொகுக்கப்பட்டது பண் முறையில்தாம்.