5.1 சைவச் சிற்றிலக்கியங்கள்

சைவச் சிற்றிலக்கியங்கள் புதிய இலக்கிய வடிவங்களைத் தமிழ்
மொழிக்குத்தந்துள்ளன. அவற்றுள் பலவும் கோவை, உலா,
கலம்பகம், பிள்ளைத்தமிழ், அந்தாதி, சதகம், பரணி, பல்வேறு
பாவகைகளில் எண்ணிக்கைக் குறித்து எழுந்த மாலைகள்,
பள்ளு, குறவஞ்சி என்ற தலைப்புகளில் அமைந்துள்ளன. 10
பாடல்கள் கொண்ட பதிகங்களும் பாடப் பெற்றுள்ளன.
ஒன்றிரண்டு வகைகளைத் தவிர இவ்வகை இலக்கியங்களின்
முதல் தோற்றம் சைவ சமயத்தைச் சார்ந்தே எழுந்துள்ளது.
இது சைவம் தமிழ் மொழிக்கு வழங்கிய உயரிய
அருட்கொடையாகும்.

சைவச் சிற்றிலக்கியங்கள் பலவும் திருமுறைகளுக்கு நிகராகச்
சைவ மக்களால் போற்றப்பட்டு இறையவர் சந்நிதிகளில்
ஓதப்பட்டு வருகின்றன. பல, நம்பிக்கையூட்டும் பாராயண
நூல்களாகத் திகழ்கின்றன.