5.9 தொகுப்புரை

மேற்குறித்த சிற்றிலக்கியங்கள் அல்லாது சிவன், உமை,முருகன்,
விநாயகன் முதலிய கடவுளர் மீது பாடப் பெற்ற ஏராளமான
சிற்றிலக்கியங்களும், தனிப்பாடல்களும் தமிழில் உள்ளன.
அவற்றை எல்லாம் அறிமுகப்படுத்த இப்பாடத்தில் போதிய
வாய்ப்பு அமையவில்லை. அம்மை குறித்த நூல்களுள்
அபிராமி பட்டர் அருளிய அபிராமி அந்தாதி சிறப்புடையது.
அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்து, பாம்பன்
சுவாமிகள், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள்,
திருப்போரூர் சிதம்பர சுவாமிகள் ஆகியோர் பாடிய முருகன்
பற்றிய சிற்றிலக்கியங்கள் யாவும் சிறப்புடையன. தமிழ் மொழி
வளர்ச்சியில் சைவச் சிற்றிலக்கியங்கள் வகிக்கும் சிறப்பிடத்தை
ஒருவாறு     இப்பாடம் தொகுத்துரைத்துள்ளது. சைவச்
சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை நம்மை வியக்க வைக்கின்றன.
சமயம் சார்ந்து மொழி வளர்ச்சி பெற்ற வரலாற்றை இதைப்
போல் வேறு மொழிகளில் காண இயலவில்லை. யாப்பியல்,
சந்தம், புத்திலக்கிய வடிவங்கள், சமூக நலம் குறித்த பல் துறை
சைவச் சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழிக்கு அழகு சேர்த்துள்ளன
என்பது பெருமைக்கு உரியதாக அமைந்துள்ளது.பயில்முறைப்பயிற்சி


இப்பாடத்தில்     அறிமுகப்படுத்தப்பட்டுள்ள     சைவச்
சிற்றிலக்கியங்களைத் தொகுத்து வைத்துக் கொள்ளுங்கள் -
பிறகு அவற்றிலிருந்து - கீழ்க்கண்ட அட்டவைíயைத்
தயாரிக்கலாம்.
  1. சிவன் குறித்து எழுந்த ஆறு சிற்றிலக்கியங்கள், ஆசிரியர்
    பெயர் - பாடப் பெற்ற தலம்.

  2. முருகன் குறித்து எழுந்த நான்கு சிற்றிலக்கியங்கள்
    ஆசிரியர் பெயர் - பாடப் பெற்ற தலங்கள்.

  3. உமையம்மை குறித்து எழுந்த இரண்டு சிற்றிலக்கியங்கள்
    - ஆசிரியர் பெயர், பாடப் பெற்ற தலங்கள்.


தன் மதிப்பீடு : வினாக்கள் - II

1.
ஒளவையாரின் அறநூல்களுள் இரண்டினைக்
குறிப்பிடுக.
2.
குமர குருபரர் இயற்றிய இரண்டு கலம்பகங்களைக்
குறிப்பிடுக
3.
நால்வர் பெருமை பேசும் சிவப்பிரகாசரின் நூல்
யாது? பாடல் தொகையைக் குறிப்பிடுக.
4.
தாயுமானவர் பாடலிலிருந்து ஒரு பகுதியின்
பெயரைக் குறிப்பிடுக
5.
திருவருட்பாவின் ஆசிரியர் யார்? அது கூறும்
இறையிலக்கணம் யாது?