![]() |
இது ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று என்பதை முன்னரே பார்த்தோம். இப்போது மணிமேகலையைச் சற்று விரிவாகப் பார்க்கலாம். இதுவே தமிழில் எழுந்த முதல் பௌத்தக் காப்பியம். மணிமேகலையைப் பற்றிய சில சிந்தனைகள்......
மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்
மணிமேகலை ஒரு சீர்திருத்தக் காப்பியம் என்ற சிறப்பிற்கு உரியது. கொல்லாமை, ஊன் உண்ணாமை, கள் உண்ணாமை ஆகியவற்றை வலியுறுத்துவதோடு அனைத்து உயிர்களிடமும் அன்பு பாராட்ட வேண்டும் என்பதையும் விளக்குகிறது. எல்லாவற்றுக்கும் மேலாகச் சிறைக்கோட்டம் அறக்கோட்டமாக மாற்றப்பட்டு அங்குள்ேளார்க்கு அமுதசுரபி கொண்டு மணிமேகலை அவர்களின் பசிப்பிணியை நீக்குவதும் காப்பியத்தின் தனிச்சிறப்பாகும். இனி, இக்காப்பியம் கூறும் சமயக் கோட்பாடுகளையும் பிறவற்றையும் பார்க்கலாம். அதற்கு முன் பௌத்த சமயத்தைத் தோற்றுவித்த புத்தரைப்பற்றி மணிமேகலை என்ன கூறுகிறது என்று பார்க்கலாமா? |