3 - விடை
    
    வைதிக சமயத்தில் இந்திரன் என்றும் தேவேந்திரன் என்றும் குறிப்பிடும் வழக்கம்தான் உண்டே தவிர இந்திரர் என்று பன்மையில் வழங்கும் வழக்கம் இல்லை. ஆனால் சமண சமயத்திலோ இந்திரர் என்று கூறும் வழக்கமுண்டு. அதனால் சமணசமயம் சங்ககாலத்தில் இருந்தது என்பதை அறிகிறோம்.