|
| ஒரு காலத்தில் பௌத்த சமயம் வளம் பெற்று வாழ்ந்த தற்கான சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன. இனி அவற்றைச் சான்றுகளுடன் காணலாம். பத்துப்பாட்டு, எட்டுத்தொகை நூல்களைச் சங்ககால நூல்கள் என வழங்குகிறோம். அவற்றுள் பௌத்த சமயம் பற்றிய குறிப்புகளைப் பார்க்கலாம்.
பழந்தமிழ் நூல்களில் தலைசிறந்து விளங்கும் பத்துப்பாட்டில் ஒன்று மதுரைக்காஞ்சி என்னும் நூலாகும். இது மாங்குடி மருதனார் என்ற நல்லிசைப் புலவரால் பாடப்பெற்றது. இது பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் மீது பாடிய பாடலாகும். பழங்காலத் தமிழகத்தில் தமிழ்வேந்தர் ஆட்சியின் கீழ் தமிழ் மக்கள் வாழ்ந்த வாழ்க்கையின் சிறப்பினை அறியச் சிறந்த சான்றாகத் திகழ்வனவற்றுள் இம்மதுரைக் காஞ்சியும் ஒன்றாகும். மேற்கூறிய பாண்டியனின் ஆட்சியில் அமைந்த மதுரை நகரின் அழகும் மக்களின் பழக்க வழக்கங்களும் விரிவாகப் பேசப்படு கின்றன. மக்கள் பின்பற்றிய பல்வேறு சமயங்களின் சிறப்பும் புலவரால் பெரிதும் விளக்கமாகக் கூறப்படுகின்றது. அவ்வாறு குறிப்பிடப்படும் பல சமயங்களுள் பௌத்த சமயமும் சிறந்த இடத்தைப் பெறுகிறது.
மதுரை நகரின் சிறப்பையும் மன்னனின் பல்வேறுபட்ட சிறப்பு களையும் விரிவாகக் கூறிச் செல்லும் மாங்குடி மருதனார் சிவÂ袰ñ¢, மாயோன், முருகன் ஆகிய தெய்வங்களுக்குñ் பூசைப் பொருள் தரும் பொருட்டு மாலைநேரத்தே முழங்கும் இசைக் கருவிகள் பற்றிக் குறிப்பிடுகிறார். அதன்பின் மதுரைமா நகரத்தி லுள்ள ஏனைய பிற சமயங்களையும் விளக்கிச் செல்கிறார். அப்போது பௌத்தப் பள்ளியைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அக்குறிப்பு என்ன என்பதைப் பார்ப்போமா? அழகிய ஒளிபொருந்திய ஆபரணங்களை அணிந்துள்ளனர் சிறுபிள்ளைகள். திருவிழாக் கூட்டத்தில் சிறுபிள்ளைகள் தங்களை விட்டுப் பிரிந்து போகாமல் இருக்கத் தாய்மார் தம் கைகளால் அவர்களை அணைத்துப் பாதுகாப்பவர்களாக அழைத்துச் செல்கின்றனர்.அவர்கள் மீது கொண்ட விருப்பத்தாலும் அன்பாலும் அவ்வப்போது அவர்களைத் தம் உடலோடு அரவணைத்துக் கொள்கின்றனர். சிறுவர்களின் சிறிய கைகளைத் தம் கையால் பிடித்திருப்பதைப் புலவர், தாமரை மலர் தாமரை மொட்டினைத் தாங்கியிருப்பதுபோல் இருக்கிறது எனக் கூறுகிறார். எத்தகைய இனிய காட்சி! அழகு விளங்கப் பெண்கள் பலரும் பூசைக்கு வேண்டிய மலர், புகை முதலியவற்றோடு புத்தரை வழிபாடு செய்து, வாயால் புகழ்ந்து பாடுவதால் பௌத்தப்பள்ளி சிறந்து விளங்குகிறது என்பார். இக்கருத்தைக் கூறும் பாடலடிகளைக் காண்போமா?
பௌத்த
சமயப் பெண்கள் எத்துணை மகிழ்ச்சியோடும்மனநிறைவோடும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு புத்தரின் ஆலயத்திற்குச் சென்று வழிபடு கிறார்கள் என்பதை இவ்வரிகள் நமக்குக் காட்டுகின்றன. மேற்கூறிய காட்சியைக் கற்பனை செய்து பார்ப்பின், பௌத்த சமயத்தைத் தழுவிய மக்கள் எத்தகைய இயல்பான அமைதியான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். பழந்தமிழ் நாட்டில் பௌத்த சமயம் பரவியிருந்தமையும் சமயம் காரணமாக ஒருவரோடு ஒருவர் வேற்றுமையின்றி மக்கள் வாழ்ந்ததையும் இவ்வரிகள் நமக்கு விளக்குகின்றன அல்லவா?
எட்டுத் தொகை நூல்கள் சங்க நூல்களின் ஒரு தொகுதி சீத்தலைச்
சாத்தனார் மணிமேகலை என்னும் பௌத்த சமயக்
|