நாட்டுப்புற வழக்காறு என்பது நாட்டுப்புற
மக்களின்
வாழ்க்கையில் இடம்பெற்ற இலக்கியம், கலைகள்
என்பனவாகும். இவ்விரு பகுதிகளும்
சில முக்கியமான
பண்புகளைக் கொண்டு விளங்குகின்றன. அவையாவன:
1) நிலைத்த தன்மை உடையன
2) நிலையற்ற தன்மையும் உண்டு
3) இடையிலே நிறுத்தி வைக்கப்படுதலுண்டு
4) தள்ளி வைத்தல் என்பது உண்டு
5) மக்கள் விரும்பும் பண்பின
6) சுவையும், அழகியல் கூறும் கொண்டவை
7) சமூக அடையாளங்களைக் கொண்டவை
8) பார்வையாளன்,படிப்பாளரின்
மாற்றத்தையும் ஏற்கும்
பண்பின.
இவ்வாறு நாட்டுப்புறவியல் என்பது மக்களின் படைப்பாக,
மக்களுக்குச் சுவையூட்டும் படைப்பாக,
மக்களின் வழியே
நிகழ்த்தும் படைப்பாக விளங்கி வருகின்றது.
இவ்விலக்கியத்தின்
சிறப்பினைச் சான்றுகள் வழி அறியலாம்.
|