| 2.3 நாட்டுப்புறவியல் - பாடல்களும் கதைகளும் | |||||||||||||
நாட்டுப்புறவியலில் மக்களிடையே செல்வாக்குப் பெற்ற பாடல்கள் பல உள்ளன. அதைப்போல் மக்களிடம் மிகவும் அறிமுகமான கதைகளும் காணப்படுகின்றன. |
|||||||||||||
| 2.3.1 பாடல்கள் | |||||||||||||
இம்மக்களின் வாழ்வில் தெய்வத்திற்கு முக்கிய இடமுண்டு. இதில் பிள்ளையார் மீது பக்தி கொண்டு பாடும் பாடலில், அவருக்குப் படைக்கும் பல்வேறு வகையான பணியாரமும் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது. மாட்டுக் கொளப் படையில் மாவுருண்டை ஆயிரமாம் எருதுக் கொளப் படையில் எள்ளுருண்டை ஆயிரமாம் ஆட்டுக் கொளப் படையில் அதிரசம் ஆயிரமாம் கண்ணுக் கொளப் படையில் கடலுருண்டை ஆயிரமாம் குட்டிக் கொளப் படையில் கொழுக்கட்டை ஆயிரமாம் பண்ணிக் கொளப் படையில் பணியாரம் ஆயிரமாம் இத்தனையும் ஒப்பதமாம் - எங்க சப்பாணிப் பிள்ளையாருக்கு (நாட்டுப்பாடல் - நா.வானமாமலை) என்ற நாட்டுப்புறப் பாடல் வழங்கும் தகவல்கள் பலவாகும். இப்பாடலில் எதுகை, மோனையுடன், பேச்சு வழக்குச் சொற்களைக் கொண்டு, பிள்ளையார்க்குப் பிடித்தமான பணியார வகைகளை அடுக்கிச் சொல்லிச் செல்லும் பாங்கு பாராட்டுதற்குரியது. வாய்மொழி இலக்கியம் என்பதால் மனத்தில் பதிவு செய்து கொள்வதற்கு ஏற்ற முறையில் எளிய சொற்களால் இனிமை விளங்கப் பாடல் வரிகளைப் படைத்துள்ளனர். |
|||||||||||||
| 2.3.2 கதைகள் | |||||||||||||
|
இவ்வாறு வாழ்வின் அன்றாடப் பிரச்சனையே கதையின் |
|||||||||||||
|
|||||||||||||