1. பழமொழிகளின் இயல்புகள் நான்கினை எடுத்துரைக்க?

(i) பழமொழி ஒரே மூச்சில் சொல்லக் கூடியதாகவும்
     சுருக்கமாகவும் செறிவுமிக்கதாகவும் இருக்க வேண்டும்.

(ii) காரசாரமாகக் கூர்மையுடன் திகழ வேண்டும்.

(iii) மக்களால்     நன்கு     ஏற்றுக்     கொள்ளப்பட்டு,
     விரும்பப்பட்டு, அன்றாட வாழ்க்கையில் எல்லோராலும்
    ஒப்புக் கொள்ளப்பட்டு, பயன் படுத்தப்படல் வேண்டும்.