4.4
நிகழ்த்து கலைகளில் பாடுபொருள்
|
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளில் எம்மாதிரியான கதைகள், கதை
நிகழ்வுகள் எடுத்துரைக்கப் படுகின்றன? குறிப்பிட்ட கதைகள், குறிப்பிட்ட
கலைகளில் எடுத்துரைக்கப் படுவதற்கான காரணங்கள் என்ன? இவை
குறித்து இப்பகுதி விளக்குகிறது. கதை தழுவிய நிகழ்த்து கலைகளை
வகைப்பாட்டில் கண்டீர்கள். நினைவிருக்கிறதா?
|
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளில் கதைகள் பாடலாகவோ, ஆடலுடன்
கூடியதாகவோ, ஆடல், பாடல் உரையாடல்களின் வழியோ இசையுடனும்
இசைக் கருவிகளுடனும் எடுத்துரைக்கப் படுகின்றன. இக்கதைகளின்
உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தெய்வக் கதைகள்,
சமூகக் கதைகள் எனப் பகுக்கலாம்.
|
4.4.1
தெய்வக் கதைகள்
|
வழிபாட்டின்
ஓர் அங்கமாகக் கலைகள் நிகழ்த்தப்படுவதால் இறை
உணர்வைத் தூண்டும் இதிகாச, புராண, காப்பியக் கதைகளும், சிறு
தெய்வக் கதைகளுமே நிகழ்த்து கலைகளி்ல் மிகுதியாக இடம்பெறுகின்றன.
குறிப்பாக இராமாயணம், மகாபாரதம், திருவிளையாடல்
புராணம்,
பெரியபுராணம் போன்ற இதிகாச புராணக் கதைகளே மிகுதி எனலாம்.
இவை நன்கு அறியப்பட்ட கதைகளாதலால் கிராம மக்களால் விரும்பிப்
பார்க்கப்படுகின்றன.
|
நிகழ்த்து
கலைகளில் இடம்பெறும் தெய்வக்
கதைகள்
|
கலைகள் |
இதிகாச,
புராண, காப்பியக் கதைகள் |
சிறுதெய்வக்
கதைகள் |
தெருக்கூத்து |
மகாபாரதம்,
இராமாயணம்,
சிறுத்தொண்டர் கதை, வள்ளி
திருமணம்,அரிச்சந்திரன் கதை. |
ஐயனார்
சரித்திரம்,
காத்தவராயன் கதை. |
தோற்பாவைக்
கூத்து |
இராமாயணம்
|
நல்ல
தங்காள் |
பொம்மலாட்டம் |
இராமாயணம் |
சேவையாட்டம் |
இராமாயணம் |
ஒயிலாட்டம் |
இராமாயணம் |
வில்லுப்
பாட்டு |
இராமாயணம்,
மகாபாரதம்,
சிறுத்தொண்டர் கதை, வள்ளி
கதை. |
சுடலை
மாடன் கதை,
சாஸ்தா கதை,
அம்மன் கதைகள். |
கணியான்
கூத்து |
இராமாயணம்,
மகாபாரதம்,
சிறுத்தொண்டர் கதை, கோவலன்
கதை, அரிச்சந்திரன் கதை |
சுடலைமாடன்
கதை,
சாஸ்தா கதை,
அம்மன் கதைகள். |
உடுக்கைப்
பாட்டு |
பார்வதி
கதை, கோவலன் கதை |
அண்ணன்மார்
சுவாமி கதை,
காத்தவராயன்
கதை, நல்லதங்காள்
கதை, மதுரைவீரன்
கதை. |
இலாவணி |
மன்மதன்
கதை |
பகல்
வேடம்
|
இராமாயணம்,
மகாபாரதம்
|
|
|
இராமாயணம்,
மகாபாரதக் கதைகள் முழுவதுமாகக் கலைகளில்
இடம் பெறுவதில்லை. முக்கியக் கதை நிகழ்வுகள் மட்டுமே நிகழ்த்திக்
காட்டப் படுகின்றன. சிறுதெய்வக் கதைகள் அந்தந்தத் தெய்வ
வழிபாட்டில் தவறாது எடுத்துரைக்கப் படுகின்றன.
|
4.4.2
சமூகக் கதைகள்
|
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளில் சமூகக் கதைகள் பரவலாக
எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன. வரலாற்று நிகழ்வுகள், மாந்தர்கள்,
சமூக நிகழ்வுகள், மாந்தர்கள், தலைவர்கள் இவை தொடர்பான
கதைகளே சமூகக் கதைகளாக இங்குக் குறிப்பிடப் படுகின்றன. கால
மாற்றத்தால் நிகழ்த்து கலைகளில் ஏற்பட்ட வளர்ச்சி என இதனைக்
கூறலாம்.
|
நிகழ்த்து
கலைகளில் இடம்பெறும் சமூகக் கதைகள்
|
கலைகள் |
வரலாற்று
நிகழ்வு
மாந்தர் கதைகள் |
சமூக
நிகழ்வு
மாந்தர் கதைகள் |
தலைவர்கள்
கதை |
தெருக்கூத்து |
மாடுபிடி சண்டை,
கணவனின்
உயிர்காத்த கற்பக
வள்ளி, சத்தியவதி |
வில்லுப்
பாட்டு |
ஐவர்
ராசாக்கள்கதை,
கன்னடியன் போர்,
தம்பிமார் கதை |
முத்துப்
பட்டன் கதை |
காந்தி
மகான்
கதை |
கணியான்
கூத்து |
முத்துப்
பட்டன் கதை |
|
|
நாட்டுப்புற
நிகழ்த்து கலைகளின் பாடுபொருள்கள் இதிகாச, புராணக்
கதைகளாகவும் சிறுதெய்வக் கதைகளாகவுமே பெரிதும் அமைந்துள்ளன.
சமூகக் கதைகளை நிகழ்த்திக் காட்டுவது மிகக் குறைவாகக்
காணப்படுகிறது.
|
புதிய
கதைகளை உருவாக்குவதில் கலைஞர்களுக்கு உள்ள
சிரமங்கள், புதிய கதைகளைப் பார்வையாளர்கள் புரிந்து கொள்வதில்
ஏற்படும் தடுமாற்றங்கள் போன்ற காரணங்களால் மக்களால் நன்கு
அறியப்பட்ட கதைகளே திரும்பத் திரும்ப நிகழ்த்து கலைகளில்
இடம்பெற்று வருகின்றன.
|