C02114. சார்பு எழுத்துகள்

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சார்பு எழுத்துகள் என்றால் என்ன என்பதைத்தெரிவிக்கிறது. சார்பு எழுத்துகள் பத்து வகைப்படும் என்பதையும்அவற்றின் விளக்கங்களையும் உணர்த்துகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன்பெறலாம்?

சார்பு எழுத்துகளின் வகைகளைப் பிரித்துக் காணலாம்.

சார்பு எழுத்துகள் எந்தச் சூழ்நிலைகளில் வருகின்றனஎன்பதை உணரலாம்.

உயிர்மெய் எழுத்துகளின் வரி வடிவம் பற்றி விரிவாகக்காணலாம்.

சார்பு எழுத்துகள் பெறும் மாத்திரைகளை அறியலாம்.