பாடம் - 1

C02121 சொல்லின் பொது இலக்கணம்

E

இந்தப் பாடம் என்ன சொல்கிறது?

சொல்லின் பொது இலக்கணத்தை விளக்குகிறது. சொல், கிளவி, மொழி, பதம் என்னும் சொற்கள் சொல் என்னும் ஒரே பொருளைக் கொண்டவை என்று எடுத்துரைக்கிறது. சொற்பொருளை அடிப்படையாகக் கொண்ட சொற்கள்,பகுப்பை அடிப்படையாகக் கொண்ட சொற்கள், இலக்கண வகைச் சொற்கள், இலக்கிய வகைச் சொற்கள் ஆகியவற்றை விளக்குகிறது.

இந்தப் பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்?

  • சொல்லின் பொது இலக்கணத்தை அறிந்து கொள்ளலாம்.

  • சொல், கிளவி, மொழி, பதம் என்னும் சொற்கள் ஒரே பொருளைக் கொண்டவை என்று தெரிந்து கொள்ளலாம்.

  • சொற்பொருளை அடிப்படையாகக் கொண்ட சொல் வகைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

  • பகுப்பை அடிப்படையாகக் கொண்ட பத வகைகளையும் அறிந்து கொள்ளலாம்.

  • இலக்கணவகைச் சொற்களையும் இலக்கிய வகைச் சொற்களையும் புரிந்து கொள்ளலாம்.

பாட அமைப்பு