நான்காம் வேற்றுமையின் உருபு ‘கு’ ஒன்றே ஆகும். இதன் பொருள் ‘கோடல்பொருள்’ என்பதாம். கோடல்பொருள் என்பது கொடுப்பதை ஏற்றுக் கொள்ளுதலாகும். இவ்வேற்றுமையின் பொருள் கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை என்னும் ஏழுவகைப்படும். எடுத்துக்காட்டு
மேலே காட்டிய சான்றுகள் இன்னதற்கு இது என வருவதை அறிகிறோம். இதனைக் கோடல்பொருள் என்பர். இவை முறையே, கொடை, பகை, நட்பு, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, முதலிய கோடல் பொருள்களாக வந்தன. ¥ சொல்லுருபுகள் நான்காம் வேற்றுமைக்கு, ‘பொருட்டு’, ‘நிமித்தம்’, ‘ஆக’ என்னும் சொல் உருபுகளும் உண்டு. ‘ஆக’ என்ற சொல் உருபு மட்டும் ‘கு’ உருபோடு சேர்ந்துதான் வரும். எடுத்துக்காட்டு
ஆக, என்ற சொல்லுருபு மட்டும் கூலிக்கு + ஆக, ஊருக்கு + ஆக என, ‘கு’ உருபை ஒட்டியே வந்ததை அறியலாம். |