|
இந்தப்
பாடத்தைப் படிப்பதால் என்ன பயன் பெறலாம்? தமிழர் பண்பாடு மிக்கவர், நாகரிக உணர்வுக்காக நண்பர்
கொடுக்கும் நஞ்சையும்
ஏற்றுக் கொள்வர். இவ்வளவு உயர்ந்த
மக்கள் போற்றிப் பேணிய பண்பாட்டின் அடிப்படைகளை
இப்பாடத்தில் விவரிக்க முயல்கிறோம்.
இப்பாடத்தை நீங்கள் முறையே கற்றுத் தேர்ந்தால்
கீழ்க்காணும் திறன்/பயன்களைப்
பெறுவீர்கள்:
- புகழ், வீரம், மானம், விருந்தோம்பல்,
ஈகை, ஒப்புரவு,
பொதுநலம் பேணுதல் ஆகிய பண்புகள் தமிழ்ப்
பண்பாட்டின் அடிப்படைகளாக அமைந்திருப்பதைச்
சான்றுகளுடன் விளக்குதல்
- ஆண், பெண், சான்றோர் ஆகிய சமூக உறுப்பினர்
ஒவ்வொருவரும் பண்பாட்டைப் பேணும் முயற்சியில்
ஆற்ற வேண்டிய பங்களிப்புகளாகத் தமிழ் இலக்கியம்
வகுத்திருக்கும் இலக்கணத்தைக் கூறல்.
- காதற்பண்பாட்டில் தமிழர் போற்றிய
சிறப்பு இயல்புகளை
விளக்குதல் (கற்பு, களவு, அம்பல், அலர்தூற்றுதல்,
உடன்போக்கு
ஆகிய நிலைகளை விளக்குதல்)
- சமயப் பண்பாட்டின் அடிப்படையாக மனிதநேயம்,
உயிரிரக்கம், நல்லிணக்கம் போன்ற உயரிய பண்புகள்
விளங்குவதை
விவரித்தல்
|