| இசுலாம், கிறித்துவம் ஆகிய இரு
சமயங்கள் தமிழகத்திற்கு வந்த
வரலாறு ஆயத்தக்கது. வணிகத்
தொடர்பு என்ற அளவில் அரபு
நாட்டிற்கும் தமிழகத்திற்கும் முன்பே
தொடர்பு இருந்தது. பண்பாட்டு
நிலையில் இத்தொடர்பு பிற்காலத்தில்
நிகழ்ந்தது. பன்னிரண்டாம்
நூற்றாண்டில் இசுலாம் தமிழகத்தில்
ஒரு சமயம் என்ற அளவில் புகுந்தது.
மதுரை, இராமநாதபுரம்,
திருநெல்வேலி மாவட்டங்களில்
இசுலாம் தொடக்கத்தில் பரவியது. |
 தமிழகத்தில் இசுலாமிய,
கிறித்துவ சமயங்களின்
தோற்றம் |