(ஆன்ற = நிறைந்த)
எனும்
குறள்மூலம் கூறப்படுகிறது.
பிறனுடைய
மனைவியை விரும்பி நோக்காத பெரிய ஆண்மை,
சான்றோர்க்கு அறம் மட்டும் அல்ல; நிறைந்த
ஒழுக்கமும்
ஆகும் என்பது இந்தக் குறளின் பொருள்.
•
விலங்கினங்களின் கற்பு
ஆறு அறிவு படைத்த மனிதனிடம் பிறன் இல் விழையாமையை
வற்புறுத்தலாம், எதிர்பார்க்கலாம். ஆனால் விலங்கு இனத்திடம்?
விலங்கு இனத்திடமும் பிறன் இல் விழையாமையைக் காட்டுகிறார்,
இராமாயணத்தைத் தமிழில் எழுதிய கம்பன் எனும்
தமிழ்க்
கவிஞர். விலங்குகளிடையே, ஒன்றின் துணையை இன்னொன்று
விரும்புவது அல்லது அடைவது தவறு
அல்ல. அது
அவற்றினிடம் இயல்பாக அமைந்து உள்ளது. ஆனால் அந்த
விலங்குகளிடையேயும் பிற விலங்கின் துணையைத்
தன்
துணையாக்கிக் கொள்ளாத சிறப்பினைக் கம்பன்,
தன்
இராமாயணக் கதையில் காட்டுகிறார்.
குரங்கு
இனத்தைச் சார்ந்தவன் வாலி. குரங்கு இனங்களினுடைய
ஒரு நாட்டின் தலைவன். வாலியின் தம்பி சுக்ரீவன். அண்ணன்
ஆகிய வாலியின் கொடுமைகள் தாங்க முடியாமல் சுக்ரீவன்,
இராமனிடம் சரண் அடைகிறான்.
இராமன்
வாலியைக் கொன்று, வாலி ஆட்சி செய்த நாட்டையும்
சுக்ரீவனுக்குக் கொடுக்கிறான். நாட்டின் ஆட்சியில் அமர்ந்த
சுக்ரீவன், அண்ணன் மனைவி ஆகிய தாரையைத் தன் மனைவி
ஆக்கிக் கொள்கிறான். வட மொழியில்,
வால்மீகியால்
எழுதப்பட்ட இராமாயணத்தில் இவ்வாறு,
அண்ணன்
மனைவியைத் தம்பி சுக்ரீவன் அபகரித்துக் கொண்டதாகக் கதை
அமைந்து உள்ளது.
•
கம்பனின் கைவண்ணம்
ஆனால், கதையையே மாற்றுகிறார் கம்பர். எவ்வாறு மாற்றினார்?
வாலி
இறந்த பின், அவன் நாட்டைக் கைப்பற்றிய சுக்ரீவன்,
வாலியின் மனைவியாகிய தாரையைத் தன் மனைவி ஆக்கிக்
கொள்ளவில்லை, அவள் விதவையாக, அந்தப்புரத்தில் தனியாக
வாழ்ந்து வருவதாகக் கம்பன் காட்டுகிறார். ஏன்
அவ்வாறு
காட்டுகிறார்?
விலங்கு
இனங்களின் இடையேயும் பிறன் இல் விழையாமையை
எடுத்துக்காட்டவே கம்பன் இவ்வாறு மாற்றி அமைத்துள்ளார்.
மூல நூலாகிய வடமொழி இராமாயணத்தில் சொல்லாத ஒரு
கருத்தைக் கம்பன் தன் படைப்பில் சொல்லக் காரணம் என்ன?
பிறன்
இல் விழையாமைக்குக் கம்பன் கொடுத்த சிறப்பு. பிறன்
இல் விழையாமையை ஓர் அறமாக, பண்பாகக் கொண்டிருந்த
தமிழ்ச் சமுதாயத்தின் உயர்வு அத்தகைய அறத்தைப் பின்பற்றி
வாழ்தல், சிறந்த பண்பாடாகக் கருதப்பட்டது. தமிழர்களின்
அந்தப் பண்பாட்டின் அடிப்படையில்தான் இங்குச் சுக்ரீவன்
பிறனில் நோக்காப் பேராண்மை உடையவனாகக் கம்பனால்
காட்டப்படுகிறான்.
பிறன்
மனைவியை நோக்காத பேராண்மை அறச் செயல்மட்டுமா?
உயர்ந்த ஒழுக்கமும் ஆகும் என்கிறார் வள்ளுவர். பிறனில்
விழையாமையின் சிறப்பையெல்லாம் இவ்வாறு
வள்ளுவர்
கூறுவதின் நோக்கம் என்ன? எந்தச் சூழலிலும்
பிறன்
மனைவியை நோக்காதீர்கள், விரும்பாதீர்கள்
என்று
வலியுறுத்துவதேயாகும்.
|