உலகில்
உள்ள மிகச் சிறந்த சிந்தனையாளர்களில்
ஒருவர்
சாக்கிரடிஸ். அவரது ஒவ்வொரு கருத்தும்
பலவிதமான
விளக்கங்களைத் தரவல்லது என்பார்கள்.
‘உன்னை நீ
தெரிந்துகொள்’ (Know
thy self) எனும் அவரது கருத்திற்குக் காலந்தோறும், பல விளக்கங்கள்
கொடுக்கப்படுகின்றன. அதைப்
போல வள்ளுவரின் ஒவ்வொரு குறளுக்கும் ஒவ்வொரு வகையான
விளக்கங்கள் கூறப்படுகின்றன. ஒருவரது கருத்து
எந்த
அளவுக்குப் பல விளக்கங்களுக்கு இடம் கொடுக்கிறதோ, அந்த அளவுக்கு அவரது
சிந்தனை வளம்பெற்றது என்பர்.
அத்தகையோரையே தலைசிறந்த சிந்தனையாளர்கள்
என்று
குறிப்பிடுவர். உலகிலுள்ள தலையாய சிந்தனையாளர்களுள்
வள்ளுவரும் ஒருவர் என்பதற்கு உரிய பல காரணங்களில் ஒன்று,
அவரது ஒவ்வொரு குறளும் பல விளக்கங்களுக்கும் உரியது
என்பதாகும்.
|