(மழித்தல் = மொட்டையடித்தல்; நீட்டல் = முடியை நீளமாக
வளர்ப்பது)
உள்ளம் பக்குவப்படாத வரையில், பிறருக்குத் தீங்கு செய்வது
தொடர்ந்து மேற்கொள்ளப்படும் வரையில், புற வேஷங்கள்
எவையும் பயன்படா என்கிறார் வள்ளுவர்.
இன்றைக்கும்,
அறிவியலில் முன்னேறிய
இந்தக்
காலக்கட்டத்திலும், புறவேஷதாரர்கள் சமயம் சார்ந்த துறவிகள்
போன்று பொய்க்கோலம் பூண்டு வாழ்ந்து
வருகின்றனர்.
புறத்திலே மாண்பு கொண்ட தோற்றமும், அகத்திலே
மாசு
கொண்ட எண்ணமும் உடைய இவர்களைப்
போன்றோர்
வள்ளுவர் காலத்திலும் வாழ்ந்தனர். இப்போலித்துறவிகளை
அடையாளம் காட்டவே, வள்ளுவர்,
மேற்குறிப்பிட்ட கருத்துகளைக் கூறினார்.
|