|
|
|
6.1
மருத்துவம்
|
|
மனிதனுக்கு
என்று தலைவலியும் வயிற்று வலியும் வந்ததோ
அன்றே மருத்துவம் தொடங்கியது என்று
வேடிக்கையாகக்
குறிப்பிடுவர். தேவை, கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்பர்.
அந்த வகையில், மனிதனின் தொடக்க காலம் முதலே மருத்துவமும்
அவனோடு தொடர்ந்து வளர்ந்து வரும் ஒன்று. தொடக்க காலத்தில்
மனிதன் தனக்கு எளிமையாகக் கிடைத்த தாவரப் பொருள்களையும்,
கனிமப் பொருள்களையும் மருந்தாகப் பயன்படுத்தினான். அறிவியல்
வளர்ச்சி முன்னேற முன்னேற மருத்துவத்துறையில் புதிய புதிய
கண்டு பிடிப்புகள் பல வளர்ந்து வந்துள்ளன. அதன் வாயிலாக
மருத்துவ முறையிலும் பல்வேறு வகையான
மாற்றங்கள்
நிகழ்ந்துள்ளன. இத்தகைய சூழலில் வள்ளுவர் மருந்து பற்றிக்கூறும்
கருத்துகள் எந்தவகையில் அறிவியல் சார்ந்த தத்துவங்களாகத்"
திகழ்கின்றன என்பதனை நோக்குவோம்.
|
|
6.1.1
மருத்துவ முறைகள்
|
|
• ஒரு குறளைக் கற்க நான்கு ஆண்டுகள்
இந்திய எலும்பியல் துறை வல்லுநரான மருத்துவர் ம.நடராசன்
அவர்கள், திருக்குறள் பற்றிக்குறிப்பிடும் போது, மருந்து என்னும்
அதிகாரத்திலுள்ள ஒரு குறளையே, உலகிலுள்ள
மருத்துவ
மாணவர்கள் நான்கு ஆண்டுகளாக நான்கு நிலையில் கற்கின்றனர்
என்று கூறியுள்ளார்.
உலகில்
உள்ள எல்லா மருத்துவக் கல்லூரிகளிலும் மருத்துவம்
கற்கும் பாட அமைப்பு, கற்கும் நிலையிலும்
கற்பிக்கும்
அடிப்படையிலும் பெரும்பாலும் ஒன்றாகவே இருக்கின்றன. முதல்
நிலையில் நோய்களைப் பற்றிக் கற்கின்றனர்.
இரண்டாவது
நிலையில், அந்நோய்களுக்கான காரணங்களைக் கற்கின்றனர்.
அடுத்த நிலையில் அந்நோய்களை எவ்வாறு
போக்கலாம்
என்பதற்கு உரிய வழிமுறைகளைக் கற்கின்றனர்.
இறுதியாக,
நோயாளிக்கு நன்மை பயக்குமாறு செய்ய
வேண்டிய
செயல்முறையைக் கற்கின்றனர். இந்த அடிப்படையின் வரிசை
முறை கூட, கொஞ்சமும் மாறுபடாமல் வள்ளுவர்,
|
|
நோய்
நாடி நோய் முதல்நாடி அது தணிக்கும்
வாய் நாடி வாய்ப்பச் செயல்
|

(குறள்: 948)
|
|
|
(நாடி = அறிந்து, தணிக்கும் = குறைக்கும், நீக்கும் முதல்
= வேர்,
அடிப்படை, வாய் = வழி, செயல் = செய்தல்)
என்று
குறிப்பிட்டுள்ளார்.
நோயை,
அதன் அறிகுறிகளினால் (Symptoms) அது என்ன நோய்
என்பதை அறியவேண்டும். அதாவது, உடல் சுட்டால் காய்ச்சல்
(Fever) என்றும், தும்மலும் மூக்கு அடைப்பும் இருந்தால் தட்பம்
(Cold) என்றும் நோயை அடையாளம் காணவேண்டும். அதையே
வள்ளுவர் ‘நோய் நாடி’ என்று சுட்டுகிறார்.
இரண்டாவது
நிலையில், நோய் வருவதற்கு உரிய காரணங்களை
அறிய வேண்டும். மழையில் நனைந்ததால் நோய்
வந்ததா,
அதிகமாக உண்டதால் நோய் வந்ததா என்றுநோய்
வருவதற்கு
உரிய காரணத்தை அறிய வேண்டும். அதனை, ‘நோய் முதல் நாடி’
என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர். முதல் என்றால் இங்கு, நோய்
வருவதற்கு உரிய மூலம் அடிப்படை (Root) எது என்பதைக்
கண்டறிய வேண்டும். அடுத்த நிலையில், கண்டு பிடிக்கப்
பட்ட
நோயை எந்த வகையில் நீக்கலாம் என்பதற்குரிய வழிமுறைகளை
அறிந்து கொள்ளவேண்டும். அதை, ‘அது தணிக்கும் வாய்நாடி’
என்று சுட்டுகிறார்.
நான்காவதாக,
நோயை நீக்குவதற்கு அறிந்து கொண்ட வழி
முறைகளை எவ்வாறு செயல்படுத்த வேண்டும்
என்பதனை
அறியவேண்டும். அதாவது, மருந்து வாயிலாக நீக்கலாம் என்று
கருதினால் மருந்து கொடுக்கவேண்டும். அறுவை சிகிச்சையால்தான்
நோயை நீக்கமுடியும் என்று முடிவு எடுத்தால், அதைச் செயல்
படுத்தவேண்டும். வள்ளுவர் இதனை ‘வாய்ப்பச் செயல்’ என்று
குறிப்பிடுகிறார்.
அறிவியலில்
மிகவும் முன்னேறியதாகக் கருதப்படும் இன்றைக்குக்
கூட, சிகிச்சைக்காக ஒரு மருத்துவரிடம் சென்றால், மேற்குறிப்பிட்ட
நான்கு முறையில் தான் மருத்துவர்
தன் சிகிச்சையை
மேற்கொள்கிறார். மருத்துவரிடம் சென்றதும் என்ன நோய் என்று
கேட்கிறார். ‘வயிற்று வலி’ என்று கூறியதும், ‘நேற்று
என்ன
சாப்பிட்டீர்கள்?’ என்று கேட்டு, காரணம் அறிய விரும்புகிறார்.
வயிற்றுவலி, உணவு செரிக்காமல் வந்தது என்று காரணம் அறிந்த
பின்னர், அதற்கு என்ன மருந்து கொடுக்கலாம் என்று எண்ணுகிறார்.
இறுதியில் மாத்திரை கொடுக்கிறார்.
எனவே,
வள்ளுவரின் மேற்குறிப்பிட்ட குறள் இன்றும் என்றும்
மருத்துவ இயல் தத்துவத்துடன் பொருந்தக் கூடியதாகத் திகழ்கிறது
என்பது புலப்படுகிறது. இதிலிருந்து மருத்துவ முறை
பற்றிய
வள்ளுவரின் கருத்து எத்தகைய அறிவியல் அடிப்படையில் உள்ளது,
எவ்வளவு தொலைநோக்கு உடையது என்பதனை அறிந்து கொள்ள
முடிகிறது.
|
|
6.1.2
மருத்துவப் பகுதிகள்
|
|
இதற்கு
முன்னர் மருத்துவத்தின் நான்கு முறைகளைப் பற்றிக்
குறிப்பிட்ட வள்ளுவர், அடுத்த நிலையில், மருத்துவப் பகுதிகளாக
நான்கைச் சுட்டுகிறார். மருத்துவத்தில் இந்த நான்கு பகுதிகளும்
மிகவும் இன்றியமையாதவையாகும்.
ஒருவனுக்கு
நோய் வராவிட்டால், அதாவது நோயாளியே இல்லா
விட்டால் மருத்துவனோ, மருந்தோ தேவையில்லை, எல்லாமே
நோயாளியைக் அடிப்படையாகக் கொண்டே தேவைப்படுகின்றன.
எனவே, நோயாளியே மூலப்பகுதி. எனவே அதனை முதலில்
குறிப்பிடுகிறார்.
நோயாளிக்கு
என்ன நோய், எந்த மருந்தைக் கொடுக்கவேண்டும்
என்று தீர்மானிக்க வேண்டியது யார்? மருத்துவன் மருத்துவப்
பகுதியில் அடுத்து இன்றியமையாது அமைபவர் மருத்துவர். எனவே
அதை இரண்டாவது நிலையில் வள்ளுவர் கூறுகிறார்.
நோயாளியைப்
பார்த்து, இது இன்ன நோய் எனக் கண்டு பிடித்த
பின்னர், அடுத்து மருத்துவர் மேற்கொள்ள வேண்டியது என்ன?
எந்த மருந்தைக் கொடுக்கலாம் அல்லது எந்த மருத்துவ முறையைக்
கையாளலாம் என்று தீர்மானிக்கவேண்டும்.
மருந்தையோ,
மருத்தவமுறையையோ நோயாளிக்குக் கொடுப்பதற்கு
மருத்துவனுக்குத் துணையாக ஒருவர் தேவை, அதை
இன்று
செவிலியர் (Nurse) என்று குறிப்பிடுகின்றோம்.
நோயாளி,
நோயைத் தீர்க்கும் அல்லது நீக்கும்
மருத்துவன்,
நோய்க்குக் கொடுக்கும் மருந்து, மருத்துவனுக்குத்
துணையாக
இருப்பவன் என்ற நான்கு பகுதியினுள்ளும்
மருத்துவத்தை
அடக்கியுள்ளார் வள்ளுவர், இதனை,
|
|
உற்றவன்
தீர்ப்பான் மருந்து உழைச்செல்வான் என்று
|

|
|
அப்பால்
நாற்கூற்றே மருந்து
|
(குறள்:
950)
|
|
|
|
(உற்றவன் = நோயாளி,
தீர்ப்பான் = நோயைத்தீர்க்கக்கூடிய
மருத்துவன், உழைச்செல்வான் = செவிலியர்,
அப்பால் = அப்பகுதி, கூற்றே = கூறத்தக்கது)
என்ற
குறள் மூலம் குறிப்பிடுகின்றார்.
மேற்குறிப்பிட்ட
நான்கும் மருத்துவத்தின் இன்றியமையாத பகுதிகள்.
என்றும் மாறாதவை. நிலைத்து நிற்பவை. இவை மருத்துவத்தின்
அடிப்படைகள் (Basic) இவற்றைப் பற்றிச் சிந்தித்து, நெறிப்படுத்தி
வள்ளுவர் கூறியுள்ளார். இது வள்ளுவரது அறிவியல் சிந்தனையை
வெளிப்படுத்துகிறது.
|
|
6.1.3
உணவும் ஒவ்வாமையும்
|
|
நாம்,
சிலரைச் சில உணவுகளை உண்ணுமாறு வேண்டுகின்றபொழுது,
இது எனக்கு வேண்டாம் என்பார்கள். ஏன் என்று கேட்டால், என்
உடலுக்கு ஒத்துக்கொள்ளாது; சாப்பிட்டால் செரிக்காது
என்றோ
எனக்கு அந்த உணவு ஒவ்வாமை (Allergy) உடையது என்றோ
குறிப்பிடுவார்கள். வேறு சிலர் எனக்கு நீரிழிவு (Diabetics) நோய்
எனவே இந்த உணவை உண்ணக் கூடாது என்பார்கள். உடலுக்கு
ஒவ்வாது மாறுபாடு உடைய உணவை உண்டால், வயிற்றுவலி
போன்ற நோய் வரும், அல்லது இருக்கும்
நோயை அது
மிகுதியாக்கும், என்று அஞ்சுபவர்களே இவ்வாறு கூறுகின்றார்கள்.
எனவேதான் உடல் நலத்தில் கவனம் உடையவர்கள், இவ்வாறு
உடலுக்குப் பொருந்தாத உணவுகள் உண்ணுவதைத் தவிர்க்கிறார்கள்.
இந்த இந்த உணவுகள் தம் உடல் நலத்திற்கு ஊறு விளைவிப்பவை
என்று எவ்வாறு அறிந்தார்கள்? இன்றைய அறிவியல் வளர்ச்சியால்
ஏற்பட்ட மருத்துவச் சோதனைகளின் வாயிலாக, இந்த
இந்த
உணவுகளை உண்ணக் கூடாது. இவை இவை உடலுக்குத் தீங்கு
விளைவிப்பவை என்பனவற்றைக் கண்டுபிடித்தார்கள். இந்தக்
கண்டுபிடிப்புகள் வாயிலாகவே அறிந்தார்கள்.
ஆனால்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த வள்ளுவர், இதைப்
பற்றிச் சிந்தித்திருக்கிறார். அறிவியல் சோதனைகளின் முடிவுகளை
அல்லது பயன்களை நன்கு அறியும் ஆற்றல் பெற்றிருக்கிறார்.
எனவேதான், இந்த அறிவியல் உண்மையினை,
|
|
மாறுபாடு
இல்லாத உண்டி மறுத்து உண்ணின்
ஊறுபாடு இல்லை உயிர்க்கு
|

(குறள்: 945)
|
|
|
(உண்டி = உணவு, ஊறுபாடு = துன்பம்)
என்று
அறிவுரை கூறுகிறார்.
தனது
உடலின் இயல்புக்கு மாறுபாடு இல்லாத உணவுகளைத்
தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும். உடலுக்குப் பொருந்தும்
உணவை மனம் போல் உண்ணாமல் அளவு அறிந்து உண்ண
வேண்டும். அவ்வாறு உண்டால், தனது உயிருக்கு நோய்களால்
எந்தத் துன்பமும் வராது என்கிறார் வள்ளுவர்.
அறிவியல்
சோதனைகளின் வாயிலாகக் கண்டு பிடிக்கப்பட்ட
உண்மைகளைத் தன் அறிவியல் புலமையால் வெளியிட்டுள்ளார்
வள்ளுவர். அதோடு, அறிவியல் பின்புலங்கொண்ட
ஒரு
மருத்துவனைப்போல் உண்ண வேண்டிய உணவைப் பற்றியும்
அறிவுரை கூறியுள்ளார்.
|
|
6.1.4 உணவும் அளவும்
|
|
நாம்
உண்ட உணவு செரித்த பின்னரே மறுபடியும் உண்ண
வேண்டும். அது நோயில் இருந்து நம்மைப் காப்பாற்றும் என்று
கூறிய வள்ளுவர்; செரித்த பின் உண்டாலும் அளவோடுதான்
உண்ண வேண்டும் என்று கூறுகிறார். அளவு என்றால்
எந்த
அளவைப் பின்பற்றுவது என்ற ஒரு வினா எழலாம். ஒவ்வொருவரது
வயதிற்கும், உடலமைப்பிற்கும், தேவைக்கும் ஏற்ற
வகையில்
உணவின் அளவு அமைந்திருக்கும். ஆறு மாத குழந்தை உண்ணும்
உணவின் அளவு வேறு, பதினாறு வயது இளைஞன் உண்ணும்
உணவின் அளவு வேறு, அறுபது வயது முதியவர் உண்ணும்
உணவின் அளவு வேறு. புறநானூற்றுப் பாடல் ஒன்றில் நக்கீரனார்
என்னும் புலவர்,
|
|
உண்பது நாழி, உடுப்பவை இரண்டே
|
|
(புறம்
: 189)
|
|
(நாழி = படி அளவு, உடுப்பவை = உடலில் அணியக் கூடிய
ஆடை)
என்று
குறிப்பிடுகிறார்.
இதில்
‘நாழி’ என்பது ஓர் அளவைச் சுட்டும். இந்த அளவையே
எல்லோரும் பின்பற்றினார்களா என்று கூற இயலாது. இருப்பினும்
உண்ணும் போது ஏதோ ஓர் அளவை அடிப்படையாக வைக்க
வேண்டும் என்ற உணர்வு பண்டைத் தமிழர்களுக்கு இருந்திருக்கிறது
என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
எனவே,
அளவுக்கு அதிகமாக உண்ணக்கூடாது. அளவோடுதான்
உண்ண வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி
(Awareness)
இருந்திருக்கிறது என்பது புலப்படும். இத்தகைய விழிப்புணர்ச்சிப்
பெற்ற சமுதாயத்தில் வாழ்ந்த வள்ளுவர், அளவோடு
உண்ண
வேண்டிய தேவையையும், அளவுக்கு அதிகமாக உண்டால் வரும்
தீமையினையும் நன்கு அறிந்திருக்கிறார், எனவே,
|
|
அற்றால்
அளவு அறிந்து, உண்க அஃது உடம்பு
பெற்றான் நெடிது உய்க்கும் ஆறு
|

(குறள்: 943)
|
|
|
(அற்றால் = செரித்தால், பெற்றான் = பெற்றிருப்பவன்,
நெடிது = நீண்ட நாள், உய்க்கும் = கொண்டு செலுத்தும்)
என்று
கூறுகிறார்.
முன்னர்
உண்ட உணவு செரித்த பிறகு, பசியினது அளவும்,
செரிமானமும் நிலையும் நன்கு அறிந்து அளவோடு
உண்ண
வேண்டும். அவ்வாறு ஒருவன் செய்வானேயானால் அவன் பெற்ற
உடலை நீண்ட நாட்கள் பாதுகாத்துக் கொண்டு வாழ முடியும்.
இதற்கு
முன்னர் உணவு செரித்த பின்னர் உண்பதினால் ஏற்படும்
நன்மையை விளக்கினார். இந்தக் குறளில், செரித்த
உணவை
அளவோடு உண்ணுவதினால் ஏற்படும் நன்மையைக் கூறுகிறார்.
திருக்குறளுக்கு
உரை எழுதிய பரிதியார்,
இக்குறளுக்கு
உரையெழுதும்போது, ஒருவர் உண்ணும் போது, அரை வயிற்றிற்கு
உணவு உண்ண வேண்டும். கால் பங்கு அளவுக்கு நீர்
அருந்த
வேண்டும். எஞ்சிய கால்பகுதியை வெறுமையாக விட்டு
விட
வேண்டும். என, உணவு உண்ண வேண்டிய
அளவைக்
குறிப்பிடுகிறார். இம்முறை பரிதியார் காலத்திற்கும் அதற்கு முந்தியும்
உடல் நலம் கருதியோர் பின்பற்றிய முறையாக இருக்கலாம்.
யூதர்களின்
புனித நூலாகக் கருதப்படும் தல்மத் (Talmud) என்னும்
நூலில், ஒருவன், வயிற்றின் மூன்றில் ஒரு பங்கு அளவுக்கு உணவை
உண்ண வேண்டும், மூன்றில் ஒரு பங்குத் தண்ணீரை
அருந்த
வேண்டும், எஞ்சிய மூன்றில் ஒரு பங்கைக் காற்றின் இயக்கத்திற்கு
விட்டு விட வேண்டும் என்று கூறுகிறது.
மேற்குறிப்பிட்ட
வற்றிலிருந்து என்ன புலப்படுகிறது? உண்ணவதிலும்
சில நெறி முறைகளைப் பின்பற்றியிருக்கின்றனர். அளவோடு உண்ண
வேண்டும். அது நம் உடலுக்கு மிகவும் நல்லது. நோய்
நம்மை
எளிதில் அணுகாது என்ற ஓர் எண்ணம் அல்லது
நம்பிக்கை
இருந்திருக்கிறது. மேலும், மருத்துவர்கள், நமக்கு மருத்துவ அறிவுரை
கூறும் போது, நாம் உண்ண வேண்டிய உணவு வகைகளைக்
குறிப்பிடும் பொழுதும் உண்ண வேண்டிய
அளவைக்
குறிப்பிடுகின்றனர். ஒரு குவழை (Cup) பால் அருந்துங்கள். இரண்டு
தேநீர் கரண்டி (Tea spoon) தேன் அருந்துங்கள்
என்றும்
குறிப்பிடுகின்றனர். அறிவியல் சார்ந்த இந்த எண்ணம் (Awareness)
வள்ளுவருக்கும் இருந்திருக்கிறது. அதை ஓர் அறிவுரையாக இங்குக்
குறிப்பிடுகிறார்.
|
|
6.1.5
உணவும் செரித்தலும்
|
|
நம்
உடலில் வரும் நோய்களுக்கும் மருத்துவர்கள் பல காரணங்கள்
கூறுவார்கள். அவற்றில் உண்ட உணவு
செரிக்காமை.
செரிக்காமைக்குப் பல காரணங்கள் இருக்கலாம். ஆனால், எந்த
உணவாக இருந்தாலும், அந்த உணவை உண்டபின்
அது
செரிக்காமல், மேலும் மேலும் உணவை உண்ணுபவர்களுக்கு தாம்
உண்ட உணவால் எந்தப் பயனும் ஏற்படாது. உடலுக்கு
உரிய
சத்தாகவும் அது அமையாது. செரித்த உணவே,
உடலுக்குப்
பயன்படும் சத்தாகப் பயன்படும். ஒரு நிலையில்
செரிக்காமல்
உண்ணும் உணவால் உடலுக்கு எந்தவித பயனும் இல்லை. இவ்வாறு
செரிக்காமல் உண்டால், உடம்பில் எந்தவித ஊட்டச்
சக்தியும்
இல்லாமல் உடல் பெலவீனமாகும். உடல் பெலவீனமானால் எந்த
நோயும் உடலை எளிதில் பாதிக்கும். ஒரு தடவை உண்ட உணவு
செரிக்காமலிருக்கும் பொழுதே இன்னொரு முறை உண்டால் வயிற்று
வலியோ, வயிற்றுப் போக்கோ, வாந்தியோ ஏற்படும். எனவே தான்
வள்ளுவர், அருந்திய உணவு செரித்த பின்னர் அடுத்த
முறை
உணவை உண்ணுங்கள். அவ்வாறு உண்டால் உங்களுக்கு நோயும்
வராது, நீங்கள் மருந்தையும் உண்ண வேண்டிய தேவை இல்லை
என்கிறார்.
|
|
மருந்தென
வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
|

(குறள்: 942)
|
|
|
(யாக்கை = உடல், அற்றது = செரித்தது, போற்றி =
பாதுகாத்து
உணின் = உண்டால்)
உடலுக்கு
மருந்தே வேண்டாம். எப்பொழுது? தான் உண்ட உணவு
செரித்து விட்டது என்பதை உணர்ந்து பசித்தபின்
உண்ணும்
பொழுது, அவ்வாறு உண்டால் நோய் வராது. நோய் வராவிட்டால்
மருந்து எதற்கு? எனவே நோய் இல்லாமல் நலமாக வாழ வேண்டும்
என எண்ணினீர்களானால், உண்ட உணவு செரித்த பின்
உண்ணுங்கள் என்கிறார் வள்ளுவர்.
•
சேக்ஸ்பியர் கருத்து
வள்ளுவரின் இந்தக் கருத்தைப் போலவே, உலகப்
புகழ்பெற்ற,
ஆங்கில நாடக ஆசிரியர் சேக்ஸ்பியரும், ‘உணவை
உண்ண
வேண்டும் என்ற ஆர்வம், உடல் நலன் ஆகிய இரண்டும், உணவு
நன்கு செரித்தலைப் பொறுத்தே அமையும்’ என்று குறிப்பிடுகிறார்.
மருந்து என்ற அதிகாரத்தில் வள்ளுவர் கூறும்
கருத்துகள்
இன்றைய மருத்துவ உலகம் ஏற்கத்தக்க வகையில் அறிவியல்
தன்மையுடன் அமைந்துள்ளன.
|
|