|
ஒரு
செடி தள தளவென மிகவும் நன்றாகச் செழித்து வளருவதைப்
பார்க்கும் பொழுது, அது சார்ந்திருக்கும் நிலம்,
நல்ல வளம்
பொருந்திய செழிப்பானது என்று குறிப்பிடுகின்றனர்.
•
நிலமும் பயிரும்
சில நிலத்தின் தன்மையைப் பொறுத்து,
அந்த நிலத்தில்
பயிரிடுகின்றனர். எடுத்துக் காட்டாக, தமிழ் நாட்டிலேயே தஞ்சாவூர்
மாவட்டப் பகுதியில் மூன்று முறை அறுவடை செய்வர். மதுரை
மாவட்ட பகுதியில் இரண்டு முறையே அறுவடை செய்வர். இதை
மூன்று போகம் விளையும் நிலம் தஞ்சாவூர்ப் பகுதி
என்றும்,
இரண்டு போகம் விளையும் நிலம் மதுரைப்
பகுதி என்றும்
விவசாயிகள் குறிப்பிடுவர். இத்தகைய பயிரிடுதல் மேற்குறிப்பிட்ட
பகுதிகளிலுள்ள நிலங்களின் தன்மையைப்
பொறுத்தே
அமைந்துள்ளது.
கரிசல்
(Arid) நிலப்பகுதியில் பருத்தி (Cotton) மட்டுமே விளையும்.
அதை மட்டுமே பயிரிடுவர்.
•
வேதியியல் தத்துவம்
மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து என்ன தெரிகிறது?
ஒரு
நிலத்தின்மையை அதில் வளரும் செடிகளின்
வாயிலாக
அறிந்து கொள்ளலாம். இந்த உண்மையைப் பற்றி
ஆயும்
அறிவியல் துறையே மண் வேதியியல் என்பதாகும்.
மண்
வேதியியல் கூறும், இந்தத் தத்துவத்தை
வள்ளுவர்,
உவமையாகக் கையாளுகிறார்.
குடிச்சிறப்பு
உடைய ஒருவனது இயல்பைக் குறிப்பிடும்பொழுது,
|